Home
Computer

ஐபேடுக்கு போட்டியாக மைக்ரோசாப்ட் டேப்லெட்!

By Karthikeyan
ஐபேடுக்கு போட்டியாக மைக்ரோசாப்ட் டேப்லெட்!

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு புதிய டேப்லெட்டைத் தயாரித்து வருகிறது. இந்த புதிய டேப்லெட்டை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆப்பிளின் ஐபேடுடன் போட்டி போடும் வகையில் மைக்ரோசாப்ட் தனது புதிய டேப்லெட்டைத் தயாரித்து வருவதாக ஒரு வதந்தி கிளம்யிருக்கிறது.

மென்பொருள் தயாரிப்பில் அசூரனாக இருந்து வரும் மைக்ரோசாப்ட், இயங்கு தளங்களை தயாரிப்பதில் முன்னிலையில் இருக்கிறது. குறிப்பாக விண்டோஸ் 8 மற்றும் டேப்லெட்டிற்கான விண்டோஸ் ஆர்டி இயங்குதளம் ஆகியவை வெகு விரைவில் வர இருக்கின்றன.

இதுவரை தனது சாப்ட்வேர் தயாரிப்புகள் மற்றும் இயங்கு தளங்களை ஆப்பிளைப் போல் அல்லாமல் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளில் பயன்படுத்தி வந்தது. ஆனால் இப்போது அந்த நிலையை மாற்றி தனது புதிய இயங்கு தளத்தை தனது புதிய டேப்லெட்டில் களமிறக்க இருக்கிறது ஆப்பிளைப் போல. அதனால் இந்த புதிய மைக்ரோசாப்ட் டேப்லெட் ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக உருவெடுக்கும் என்று பலர் கருதுகின்றனர்.

இது போலவே கூகுளும் ஆசசுடன் சேரந்து ஒரு புதிய டேப்லெட்டை களமிறக்க இருக்கிறது. விரைவில் அந்த டேப்லெட்டும் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாப்ட்டின் புதிய டேப்லெட்டைப் பற்றிய வதந்திகளுக்கு வரும் ஜூன் 18 அன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது. ஏனெனில் அன்று மைக்ரோசாப்ட் தனது புதிய டேப்லெட்டைப் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X