செப்டம்பரில் ஐபோன்5 மற்றும் மினி ஐபேட்: உண்மையா?

Posted By: Karthikeyan
செப்டம்பரில் ஐபோன்5 மற்றும் மினி ஐபேட்: உண்மையா?

கேஜிஐ செக்யூரிட்டிஸ் என்ற செய்தி நிறுவனத்தின் ஆய்வாளர் மிங் சி கூவோ ஒரு புதிய செய்தியை கணினி உலகில் தூவி விட்டிருக்கிறார். அது என்னவென்றால் வரும் செப்டம்பரில் ஆப்பிள், ஐபோன் 5 மற்றும் சாதாரண ஐபேடை விட சற்று குறைந்த அளவில் ஒரு மினி ஐபேடைக் களமிறக்க இருக்கிறது என்பதாகும். ஆனால் இது உண்மையா என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் இப்போதே ஆப்பிள் ரசிகர்களின் பல்சுகள் எகிற ஆரம்பித்துவிட்டன.

புதிய ஐபோன் 4.08 இன்ச் அளவில் பெரிய டிஸ்ப்ளேயுடன் வரும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது. அதுபோல் 30 பின் கனெக்டருக்கு பதிலாக 19 பின் போர்ட் இந்த புதிய ஐபோனில் வரும் என்று சொல்லப்பட்டது.

அதோடு ஐபேட் மினியும் விறைவில் விற்பனைக்கு வரும் என்று கூவோ கூறியிருக்கிறார். இந்த புதிய மினி ஐபேட் கைக்கு அடக்கமாக அழகாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

செப்டம்பர் மாதம் வெகு தூரத்தில் இருக்கவில்லை. மிக அருகில் தான் இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்