ரிம் களமிறக்கும் ப்ளாக்பெரி 10 அப்ளிகேசன்

ரிம் நிறுவனம் ப்ளாக்பெரி 10 என்று ஒரு புதிய அப்ளிகேசனை வெகு விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த அப்ளிகேசனின் முக்கியமான சிறப்புகளை நேற்று ரிம் அறிவித்திருக்கிறது.
இந்த அப்ளிகேசன் முதல் முக்கிய அம்சம் ப்ளாக்பெரி ப்ளோ ஆகும். இந்த சிறப்பு வசதி மூலம் விண்டோஸை சிறியதாக்கி ஓடிக் கொண்டிருக்கும் எல்லா அப்ளிகேசன்களையும் மொபைல் திரையில் பார்க்க முடியும். எனவே அடுத்த அப்ளிகேசனுக்கு மாறும் போது மெயின் திரைக்கு போக வேண்டிய அவசியம் இருக்காது.
அடுத்த முக்கிய சிறப்பு ப்ளாக்பெரி ஹப் ஆகும். இந்த அப்ளிகேசன் மூலம் ஒரே நேரத்தில் பல இமெயில் அக்கவுண்டுகளில் இருந்து வரும் செய்திகளையும் மிக சிறப்பாக கையாள முடியும். அதே நேரத்தில் இந்த அப்ளிகேசன் அப்பாயின்மெண்டுகள் மற்றும் முக்கிய கூட்டங்கள் ஆகியவற்றை நினைவூட்டும்.
இறுதியாக ப்ளாக்பெரி அப் வேர்ல்ட் ஸ்டோர் இனி இசை, படங்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றை விற்பனை செய்ய இருக்கிறது. குறிப்பாக அப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுல் ப்ளே ஷாப் போன்றவை செய்வது போல் ப்ளாக்பெரி அப் வேர்ல்ட் ஸ்டோரும் செயல்படும். இந்த ப்ளாக்பெரி 10 அப்ளிகேசன் 2013ன் தொடக்கத்தில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications