சாம்சங்கின் புதிய ஆர்சி-510 லேப்டாப் - சிறப்பு பார்வை

By Super
|
சாம்சங்கின் புதிய ஆர்சி-510 லேப்டாப் - சிறப்பு பார்வை
சாம்சங்கின் புதிய ஆர்சி-510 லேப்டாப்பை பார்த்தாலே யாருக்கும் உடனே அதை வாங்க வேண்டும் என்று ஒரு ஆசை வரும். அந்த அளவிற்கு சாம்சங்கின் புதிய ஆர்சி-510 ஸ்டைலாக அட்டகாசமாக கவரக்கூடிய வகையில் உள்ளது. மேலும் இதன் சிறப்பு மலிவு விலையில் வாங்கலாம்.

இதனுடைய ட்ராக் பேட் மற்றும் யூட்டிலிட்டி பட்டன்கள் ஆகியவை இதை இலகுவாக இயக்கும் வகையில் உள்ளன. இதனுடயை கீபேட் தனியாக இருந்தாலும் இதனுடைய மவுஸ் பட்டன்கள் இயக்குவதற்கு எளிதாக இருக்கின்றன.

சாம்சங்கின் புதிய ஆர்சி-510ன் ப்ராஸஸர் 3 மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன இன்டல் கோர் ஐ3 380எம் ஆகும். இதனுடைய சிபியு டூவல் கோரினால் ஆனது. மேலும் இது 2.53ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கக்கூடியது. சாம்சங்கின் புதிய ஆர்சி-510 3ஜிபி டிடிஆர் 1066 மெகாஹெர்ட்ஸ் ரேமையும் பெற்றிருக்கிறது.

க்ராபிக்ஸ் வசதிகளுக்காக என்விஐடிஐஎ ஆப்டிமஸ் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. மேலும் இதனுடைய என்விஐடிஐஎ ஜிஇபோர்ஸ் ஜிடி315 க்ராபிக்ஸ் மற்றும் வீடியோ கேம்களை சிறப்பாக இயக்க உதவும். மேலும் இது 500ஜிபி ஹார்ட் டிரைவையும் மெகா சேமிப்பு வசதியையும் உள்ளடக்கியிருக்கிறது.

சாம்சுங்கின் புதிய ஆர்சி-510ன் ஹார்ட் டிரைவ் கவனிக்கத்தக்க ஒன்றாகும். அதாவது ஹார்ட் டிரைவ் தொடர்ந்து இயங்க ஒரு வினாடிக்கு 25.4 மெகா பைட்ஸ்களாகும். அதே நேரத்தில் ட்ரான்ஸ்பர் டெஸ்டுக்கு 20.2 மெகா பைட்ஸ்களாகும்.

சாம்சங்கின் புதிய ஆர்சி-510 லேப்டாப் 1.3 மெகா பிக்ஸல் கேமராவை கொண்டுள்ளது. இதனுடைய 15.6 இஞ்ச் எல்சிடி ஆர்சி510 திரை பல வண்ணங்களை சப்போர்ட் செய்யும். மேலும் இது 1366 X 768 பிக்ஸல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. மேலும் இதன் ஒலிபெருக்கி இணைப்பு கீபேடிலும் உள்ளது.

சாம்சுங்கின் புதிய ஆர்சி-510 யுஎஸ்பி போர்ட்டை வழங்குகிறது. மேலும் எல்எஎன், ப்ளூடூத் மற்றும் வைபை ஆகியைவையும் உள்ளன. வீடியோ வசதிக்காக விஜிஎ/டிவிஐ/ஹச்டிஎம்ஐ அகியவையும் உள்ளன. மேலும் இதில் மெமரி கார்ட் ரீடரும் உள்ளன. இது எஸ்டி மற்றும் எம்எம்சி ஆகியவற்றை சப்போர்ட் செய்யும்.

பவர்பேக்டு அம்சங்களை கொண்ட இந்த போன் ரூ.39,990க்கு கிடைக்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X