Home
Computer

என்னதான் உள்ளது புதிய ஐபெர்ரி டேப்லட்டில்...!

By Super

என்னதான் உள்ளது புதிய ஐபெர்ரி டேப்லட்டில்...!
புதிய டேப்லட் வாங்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐபெர்ரி நிறுவனம் ஒரு இனிய படைப்பை தர இருக்கிறது. ஆசஸ் ஏஎக்ஸ்-02 என்ற புதிய டேப்லட்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த டேப்லட்டின் வடிவமைப்பு மிக சிறப்பு வாய்ந்தது என்று கூறலாம்.

இதன் தோற்றம் பாலி கார்பனேட் பிலாஸ்டிக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்பது இதன் சிறப்பான விஷயமாகும். இதனால் கீறள்கள் ஏற்படாமல் இருக்கும். கார்பனேட் கிராஃபைட் நிறம் கொண்ட இந்த டேப்லட் பார்ப்பவர்களின் கண்களை எளிதாக கவர்ந்துவிடும் என்று கூறலாம்.

7 இஞ்ச் திரை கொண்ட இந்த டேப்லட்டில் எந்த தகவல்களையும் தெளிவாக பார்க்க முடியும். சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுக்க இந்த டேப்லட்டில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் ஆன்ட்ராய்டு சான்ட்விச் இயங்குதளத்தில் இயங்கும்.

இதன் திரையின் மூலம் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். செயல்பாடுகள் சிறப்பாக இருக்க இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட டியூவல் கோர் அப்ளிக்கேஷன் பிராசஸரையும் இந்த ஐபெர்ரி ஆசூஸ் ஏஎக்ஸ்-02 டேப்லட்டில் பெறலாம். அதி வேகமாக இதில் வைபை தொழில் நுட்ப வசதியினை கொடுக்கும்.

வீடியோ கான்ஃபிரன்ஸிங் வசதிக்காக இதில் 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும், 2 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. சிறந்த பேட்டரி பேக்கப் வசதிக்காக இதில் 4,000 எம்ஏஎச் பேட்டரியையும் இந்த டேப்லட்டில் பயன்படுத்த முடியும். வாரண்டி வசதியுடன் இந்த ஐபெர்ரி ஆசஸ் ஏஎக்ஸ்-02 டேப்லட் ரூ.10,000 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X