Home
Computer

இலவச சலுகைகளுடன் ரிலையன்ஸ் அறிமுகம் செய்யும் புதிய டேப்லட்!

By Super
இலவச சலுகைகளுடன் ரிலையன்ஸ் அறிமுகம் செய்யும் புதிய டேப்லட்!

புதிய 3ஜி டேப் என்ற டேப்லட்டை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. நிறைய நிறுவனங்கள் புதிய எலக்ட்ரானிக் சாதனங்களை வழங்குகின்றது.

சில மின்னணு சாதனங்கள் பெயரில் மட்டும் புதியமையை காட்டுகின்றது. ஆனால் ரிலையனஸ் அறிமுகம் செய்ய இருக்கும் இந்த டேப்லட் நிச்சயம் புதிய தொழில் நுட்பத்தினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று கூறலாம்.

இந்த 3ஜி டேப் டேப்லட் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். 7 இஞ்ச் திரை என்பது சாதாரணமாக எல்லா டேப்லட்களும் வழங்கும் திரை தான்.

இந்த 3ஜி டேப் டேப்லட்டும் 7 இஞ்ச் திரையினை தான் வழங்குகிறது. ஆனால் இதன் துல்லியம் தகவல்களை நிச்சயம் தெளிவாக காட்டும் என்று கூறலாம்.

ஏனெனில் இந்த டேப்லட்டில் 1024 X 600 பி திரை துல்லியத்தினை பெற முடியும். அதோடு இந்த டேப்லட்டில் உள்ள 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் 3 மெகா பிக்ஸல் கேமரா தேவையான அளவு துல்லியத்துடன் புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் வழங்கும். இந்த டேப்லட்டில் மெயின் கேமரா இல்லாமல் இதில் முகப்பு கேமராவும் உள்ளது.

இந்த டேப்லட்டினை வாங்குகையில், இதோடு ரூ. 6,250 மதிப்புள்ள இலவச சலுகைகளையும் வழங்குகிறது 3ஜி டேப் ரிலையன்ஸ் டேப்லட்.

இந்த டேப்லட்டில் 3 ஜிபி வரை 3ஜி வசதியை மூன்று மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். 3 மாதத்திற்கு லோக்கள் மற்றும் எஸ்டிடி வீடோ காலிங் வசதியை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். இது போன்ற இன்னும் அதிக சலுகைகளை வழங்குகிறது ரிலையன்ஸ் டேப்லட்டின் 3ஜி டேப் டேப்லட்.

கூடிய விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ரிலையன்ஸ் 3ஜி டேப் டேப்லட் ரூ. 14, 499 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X