ஜியோ லேப்டாப் : அறிமுகம் ஆவதற்கு முன்பே வெளியான 7 விஷயங்கள்.!

ஆய்வாளர்களின் படி, ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்தபடியாக பெரிய அளவிலான ARPU (Average revenue per user) கொண்ட சாதனமாக இன்-பில்ட் செல்லுலார் கனெக்ஷன் கொண்ட லேப்டாப்கள் திகழும்.

|

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ 4ஜி பீச்சர் போனை தொடர்ந்து, ஜியோ 4ஜி சிம் கார்ட் உடன் கூடிய ஜியோ லேப்டாப் ஒன்று மிக விரைவில் அறிமுகமாகும் என்கிற தகவல் நேற்று வெளியானது.

ஜியோ லேப்டாப் : அறிமுகம் ஆவதற்கு முன்பே வெளியான 7 விஷயங்கள்.!

லேப்டாப் சந்தையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் ஜியோ 4ஜி லேப்டாப் ஆனது ரிலையன்ஸ் ஜியோவின் மி-ஃபை டாங்கிள்ஸ்,லைஃப் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஜியோபோன்களை போன்றே எதிர்பார்த்த அளவிலான வெற்றியை அடையுமா என்பதே இங்கு எழும் ஒரே கேள்வி. அந்த கேள்விக்கான பதிலை தேடும் முன்னர், 'ஆல்வேஸ் ஆன் கனெக்டிவிட்டி' லேப்டாப் என்று கூறப்படும் ஜியோ 4ஜி லேப்டாப் பற்றிய 7 சமாச்சாரங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

01. இன்-பில்ட் செல்லுலார் கனெக்ஷன்

01. இன்-பில்ட் செல்லுலார் கனெக்ஷன்

எதிர்பார்க்கப்படும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி லேப்டாப் ஆனது இன்-பில்ட் செல்லுலார் கனெக்ஷன் உடன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதாவது இந்த லேப்டாப் ஆனது 4ஜி சிம் அட்டை ஆதரவோடு வெளியாகும் என்று அர்த்தம்.

02. லேப்டாப்பில் ஸ்னாப்ட்ராகன் 835 செயலி

02. லேப்டாப்பில் ஸ்னாப்ட்ராகன் 835 செயலி

வெளியான தகவல்களின் படி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அமெரிக்காவின் சிப் மேக்கிங் நிறுவனமான க்வால்காம் உடன், ஜியோ 4ஜி லேப்டாப் சார்ந்த பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது. ஆக வரவிருக்கும் ஜியோ லேப்டாப்பில் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 செயலி அறிமுகப்படுத்தப்படலாம். இந்த இடத்தில் ,க்வால்காம் நிறுவனமானது ஏற்கனவே, ஜியோ 4ஜி பீச்சர் போன் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

03. விண்டோஸ் 1ஓ கொண்டு இயங்கும்

03. விண்டோஸ் 1ஓ கொண்டு இயங்கும்

வெளியான தகவலின் மிக சுவாரசியமான பகுதி இதுதான். அதாவது ஜியோ 4ஜி லேப்டாப்கள் ஆனது விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயக்கப்படும். இதுவொரு அதிகாரபூர்வமான தகவல் அல்ல, வெறும் ஊகங்கள் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

04. ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் உறுதிப்பாடு

04. ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் உறுதிப்பாடு

க்வால்காம் நிறுவனமானது அதன் ஹோம்- பிராண்ட் ஆன ஸ்மார்ட்ரான் உடன், ஜியோ லேப்டாப் சார்ந்த பேச்சுவார்தையை நிகழ்த்தி உள்ளது. அந்த பேச்சுவார்த்தைகளை ஸ்மார்ட்ரான் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆகமொத்தம் ஜியோ லேப்டாப் சார்ந்த பணிகள் மும்மரமாக நடைபெறுவதை அறிய முடிகிறது.

05.

05. "நாங்கள் ஜியோவுடன் பேசினோம்"

க்வால்காம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மூத்த இயக்குனரானமிகுவல் நுணுஸ் (ப்ராடக்ட் மேனேஜ்மென்ட்), "நாங்கள் ஜியோவுடன் பேசினோம், அவர்களால் (ஜியோ நிறுவனத்தினால்) டேட்டா மற்றும் கன்டென்ட் கொண்ட ஒரு சாதனத்தை சாத்தியமாக்க முடியும்" என்று கூறியுள்ளார்

06. ஆல்வேஸ் கனெக்டட் பிசிக்கள்

06. ஆல்வேஸ் கனெக்டட் பிசிக்கள்

க்வால்காம் நிறுவனமானது, ஏற்கனவே உலகளாவிய ரீதியில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அவைகளில் 'ஆல்வேஸ் கனெக்டட் பிசிக்கள்' என அழைக்கப்படும் நிறுவனங்களான அசுஸ், ஹெச்பி மற்றும் லெனோவா போன்ற நிறுவனங்களும் அடங்கும்.

07. வைஃபை-ஐ விட மிகவும் பாதுகாப்பானது.!

07. வைஃபை-ஐ விட மிகவும் பாதுகாப்பானது.!

ஆய்வாளர்களின் படி, ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்தபடியாக பெரிய அளவிலான ARPU (Average revenue per user) கொண்ட சாதனமாக இன்-பில்ட் செல்லுலார் கனெக்ஷன் கொண்ட லேப்டாப்கள் திகழும். நீல் ஷாவின் (ஆய்வக இயக்குனர், டிவைஸ் & ஈகோசிஸ்டம்ஸ், கவுன்டர்பாயிண்ட் ரிசர்ச்) கருத்துப்படி, "இவ்வகை தயாரிப்புகள், முதலில் இன்-பில்ட் செல்லுலார் கனெக்ஷன் சார்ந்த உற்பத்தி மதிப்பை அதிகாரிக்கும் மற்றும் எங்கும் நிறைந்த கனெக்டிவிட்டியை வழங்கும். இரண்டாவதாக தனியுரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில், செல்லுலார் இணைப்பானது, வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் பாதுகாப்பானது ஆகும்."

Best Mobiles in India

English summary
Reliance Jio-powered laptops coming soon: 7 things to know. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X