Home
Computer

அசத்தலான இரண்டு ரெட்மி லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய ரெட்மிபுக் ப்ரோ, ரெட்மிபுக் e-learning edition மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் தனித்துவமான வசதிகளுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இரண்டு ரெட்மி லேப்டாப்

இந்த இரண்டு ரெட்மி லேப்டாப் மாடல்களும் விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளம், எம்எஸ் ஆபிஸ் 2019 மற்றும் எம்ஐ ஷேர் போன்ற விருப்பங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் ரெட்மிபுக் ப்ரோ, ரெட்மிபுக் e-learning edition மாடல்களின் விலை மற்றும் பல்வேறு விவரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 ரெட்மிபுக் ப்ரோ அம்சங்கள்

ரெட்மிபுக் ப்ரோ அம்சங்கள்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மிபுக் ப்ரோ மாடல் ஆனது 15.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 பிக்சல் கொண்ட எச்டி வெப்கேம் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ன் கோர் ஐ 5 டைகர் லேக் பிராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே

குறிப்பாக ரெட்மிபுக் ப்ரோ லேப்டாப் மாடல் இன்டெல்லின் 11-வது ஜென் கோர் ஐ 5 டைகர் லேக் ப்ராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனம் Charcoal Grey நிறத்தில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மிபுக் ப்ரோ லேப்டாப் மாடலி 8ஜிபி

இந்த புதிய ரெட்மிபுக் ப்ரோ லேப்டாப் மாடலில் 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. அதேபோல் 1.8 கிலோ எடை மற்றும் 19.9 மிமீ தடிமன் கொண்டது இந்த அசத்தலான ரெட்மிபுக் ப்ரோ லேப்டாப் மாடல். எனவே எளிமையாக அனைத்து இடங்களுக்கும் எடுத்து சென்று பயன்படுத்தலாம்.

 இரண்டு யுஎஸ்பி 3.2 டைப்-சிபோர்ட், யுஎஸ்பி 2.0, எச்டிஎம்ஐ போர்ட், ஆ

டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத் வி 5.0, இரண்டு யுஎஸ்பி 3.2 டைப்-சிபோர்ட், யுஎஸ்பி 2.0, எச்டிஎம்ஐ போர்ட், ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மிபுக் ப்ரோ லேப்டாப் மாடல். இதுதவிர எஸ்டி கார்டு ரீடர், இரண்டு 2W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல்.

 ரெட்மிபுக் e-learning edition அம்சங்கள்

ரெட்மிபுக் e-learning edition அம்சங்கள்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மிபுக் இ-லேர்னிங் எடிஷன் ஆனது இன்டெல்லின் 11-வது ஜென் கோர் ஐ 3 டைகர் லேக் ப்ராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த மாடலில் 256ஜிபி மற்றும் 512ஜிபி என இரண்டு ஸ்டோரேஜ் விருப்பம் உள்ளது. மேலும் ரெட்மிபுக் e-learning edition மாடலின் மற்ற அம்சங்கள் ரெட்மிபுக் ப்ரோ போலவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 இரண்டு லேப்டாப் மாடல்களின் விலை

இரண்டு லேப்டாப் மாடல்களின் விலை

ரெட்மிபுக் ப்ரோ மாடலின் விலை ரூ.49,999-ஆக உள்ளது. மேலும் HDFC வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ரெட்மிபுக் ப்ரோ மாடலை வாங்கினால் ரூ.3500 வரை தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

256ஜிபி ஸ்டோரேஜ் விருப்பம் கொண்ட ரெட்மிபுக் e-learning edition விலை ரூ.41,999-ஆக உள்ளது.
512ஜிபி ஸ்டோரேஜ் விருப்பம் கொண்ட ரெட்மிபுக் e-learning editionவிலை ரூ.44,999-ஆக உள்ளது.
அதேபோல் இந்த சாதனங்களையும் HDFC வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.2500-வரை தள்ளுபடி கிடைக்கும்.

குறிப்பாக இந்த இரண்டு லேப்டாப் மாடல்களும்ஆகஸ்ட் 6 ஆம்தேதி மி.காம், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் விற்பனைக்கு வரும்

Best Mobiles in India

English summary
RedmiBook Pro and RedmiBook e-learning edition Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X