14-இன்ச் டிஸ்பிளேவுடன் ரெட்மிபுக் 14 சாதனம் அறிமுகம்.!
வைஃபை, ப்ளூடூத், சார்ஜிங் போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட், 3.5எம்எ; ஆடியோ ஜாக், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டு ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ததை தொடர்ந்து தற்சமயம் புதிய ரெட்மிபுக் 14 நோட்புக் சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த சாதனம் புதிய
மென்பொருள் தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சாதனம் விரைவில் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு சீனாவில் வரும் ஜீன் 1-ம் தேதி முதல் ரெட்மிபுக் 14 சாதனம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
ரெட்மிபுக் 14சாதனம் 14-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1920 x 1080பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது, பின்பு 16:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியின் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

இன்டெல்-கோர்:
இந்த லேப்டாப் மாடல் 8-வது ஜென் இன்டடெல் கோர் ஐ7 மற்றும் என்விடியா ஜியிபோர்ஸ்எம்எஸ்250 கிராபிக்ஸ்
வசதியைக் கொண்டுள்ளது, பின்ப 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

இணைப்பு ஆதரகள்:
வைஃபை, ப்ளூடூத், சார்ஜிங் போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட், 3.5எம்எ; ஆடியோ ஜாக், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் டி.டி.எஸ் சரவுண்ட் ஒலி, 19எம்எம் முழு அளவிலாக விசைப்பலகை, 1.5கிலோ எடை போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி லேப்டாப்

பேட்டரி-விலை:
ரெட்மிபுக் 14 லேப்டாப் மாடல் சிங்கிள் சார்ஜரில் 10மணி நேரம் பேட்டரி பேக்அப் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு (இந்திய மதிப்பில்) ரூ.43,340-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications