13.3-இன்ச் டிஸ்பிளேவுடன் புத்தம் புதிய ரெட்மி லேப்டாப் அறிமுகம்.!

|

ரெட்மி நிறுவனம் இன்று புதிய ரெட்மிபுக் 13 என்கிற லேப்டாப் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் சில்வர் நிறத்தில் அறிமுகமாகியுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1920 x 1080 பிக்சல் திரமானம்

1920 x 1080 பிக்சல் திரமானம்

புதிய ரெட்மிபுக் 13 மாடல் ஆனது 13.3-இன்ச முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920 x 1080 பிக்சல் திரமானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் 178 டிகிரி அளவிலான வியூ ஆங்கிளையும், 89 சதவீதம் ஸ்க்ரீன்-டு- பாடி விகிதத்தையும் கொண்டுள்ளது.

 Nvidia GeForce MX250 கிராபிக்ஸ்

Nvidia GeForce MX250 கிராபிக்ஸ்

இந்த ரெட்மி லேப்டாப் மாடல் 10-வது தலைமுறை இன்டெல் கோர் ப்ராசஸர்களையும், Nvidia GeForce MX250 கிராபிக்ஸ்மற்றும் 8 ஜிபி டிடிஆர் 4 ரேம் போன்ற அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் சியோமி நிறுவனம் தனது தனியுரிம வெப்ப மேலாண்மை முறையை (proprietary thermal management system) ரெட்மிபுக் 13 லேப்டாப்பில் பயன்படுத்தியுள்ளது, அதன்படி இதில் 6மிமீ விட்டம் கொண்ட டூயல் ஹீட் பைப்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.அட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.

டி.டி.எஸ் சரவுண்ட் ஒலி

டி.டி.எஸ் சரவுண்ட் ஒலி

குறிப்பாக இந்த ரெட்மிபுக் 13 சாதனத்தில் chiclet-style keyboard மற்றும் டி.டி.எஸ் சரவுண்ட் ஒலி ஆடியோ ஆதரவு இடம்பெற்றுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

100சதவிகிதம் சார்ஜ்

100சதவிகிதம் சார்ஜ்

மேலும் ரெட்மிபுக் 13 மாடலில் உள்ள பேட்டரி ஆனது 100சதவிகிதம் சார்ஜ் செய்யப்பட்ட 11மணிநேர பேக்கப் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த நோட்புக் வெறும் 35நிமிட நேரத்தில் 50சதவிகித பேட்டரியை சார்ஜ் செய்வதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

 ரெட்மிபுக் 13 லேப்டாப்  விலை

ரெட்மிபுக் 13 லேப்டாப் விலை

ரெட்மிபுக் 13 லேப்டாப்பின் இன்டெல் கோர் ஐ5 உடனான 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி எஸ்எஸ்டி மாடலின் இந்திய விலைமதிப்பு ரூ.42,300-ஆக உள்ளது. அதேபோல் ரெட்மிபுக் 13 லேப்டாப்பின் இன்டெல் கோர் ஐ7 உடனான 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி எஸ்எஸ்டி மாடலின் இந்திய விலை
மதிப்பு ரூ.52,400-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
RedmiBook 13 launched with 10th Gen Intel Core, NVIDIA GeForce MX 250 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X