Home
Computer

இந்தியாவில் அசத்தலான ரியல்மி புக் பிரைம் லேப்டாப் அறிமுகம்.! விலை?

ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் புதிய ரியல்மி புக் பிரைம் லேப்டாப் மாடலை அறிமுகம் செயதுள்ளது ரியல்மி நிறுவனம்.

பிரைம் லேப்டாப் ஆனது 14.2-இன்ச்

ரியல்மி புக் பிரைம் லேப்டாப் ஆனது 14.2-இன்ச் 2கே எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 3:2 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிககவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 புக் பிரைம் லேப்டாப் மாடலில் 11வது

ரியல்மி புக் பிரைம் லேப்டாப் மாடலில் 11வது ஜெனரல் இன்டெல் கோர் i5-11320H பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடல் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு Intel Iris Xe Graphics, டூயல் ஃபேன் லிக்விட் கூலிங் சிஸ்டம் ஆகிய வசதிகளுடன்
வெளிவந்துள்ளது இந்த புதிய லேப்டாப் மாடல்.

புக் பிரைம் லேப்டாப் ஆனது 16ஜிபி ரேம்

ரியல்மி புக் பிரைம் லேப்டாப் ஆனது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்
விண்டோஸ் 11 இயங்குதளத்தில் இயங்குகிறது இந்த புதிய ரியல்மி புக் பிரைம் லேப்டாப் மாடல்.

ரியல்மி புக் பிரைம் லேப்டாப்

ரியல்மி புக் பிரைம் லேப்டாப் மாடலில் பேக் லிட் கீபோர்ட் ஆதரவு உள்ளது. பின்பு டிடிஎஸ் ஆடியோ தொழில்நுட்பம் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி புக் பிரைம் லேப்டாப். அதேபோல் சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கிறது இந்தபுதிய லேப்டாப்.

பேட்டரி பேக்கப் கிடைப்பதாக

54Wh பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி புக் பிரைம் லேப்டாப் மாடல். அதேபோல் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் இதில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப்பை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 12 மணி நேரம் பேட்டரி பேக்கப் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த தக

வைஃபை 6, புளூடூத் 5.2, டைப்-சி, டைப்-ஏ போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஸ்லாட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான லேப்டாப் மாடல். மேலும் இதன் விலை சார்ந்த தகவலைப் பார்ப்போம்.

கொண்ட ரியல்மி புக் பிரைம்

16ஜிபி ரேம் கொண்ட ரியல்மி புக் பிரைம் லேப்டாப் மாடலின் விலை ரூ.64,999-ஆக உள்ளது. பின்பு இந்த லேப்டாப் வரும் ஏப்ரல் 13-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அறிமுக சலுகையாக ரூ.57,999-விலையில் விற்பனைக்கு வருகிறது ரியல்மி புக் பிரைம் லேப்டாப். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இதை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Realme Book Prime laptop Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X