ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்த புதிய லேப்டாப் மாடல்.! விலை மற்றும் விபரங்கள்.!

|

ரியல்மி நிறுவனம் ரியல்மி புக் Enhanced Air எனும் லேப்டாப் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் சற்று உயர்வான விலையில் தனித்துவமான அம்சங்களடன் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த புதிய லேப்டாப் மாடல் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி புக் Enhanced Air

ரியல்மி புக் Enhanced Air மாடலின் விலை CNY 4,699 (இந்திய மதிப்பில் ரூ.55,000) ஆக உள்ளது. வரும் ஜனவரி 21-ம்தேதி இந்த புதிய லேப்டாப் சீனாவில் விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

70பில்லியன் டாலர்-கேண்டி க்ரஷ், கால் ஆஃப் ட்யூட்டி கேம்களை உருவாக்கிய மாபெரும் நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட்

க் Enhanced Air மாடல் ஆனது

இந்த ரியல்மி புக் Enhanced Air மாடல் ஆனது ஸ்கை ப்ளூ மற்றும் ஐலேண்ட் கிரே நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதேபோல் இந்த சாதனம் 14-இன்ச் 2கே ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 400 நிட்ஸ் ப்ரைட்னஸ்,720பிக்சல் வெப்கேம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த லேப்டாப் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹாரிபாட்டர் கோட்டையில் திருமணம்: தமிழ் தம்பதிகளின் முதல் முயற்சி- இறந்த மணமகளின் தந்தையும் விழாவில் பங்கேற்பு!ஹாரிபாட்டர் கோட்டையில் திருமணம்: தமிழ் தம்பதிகளின் முதல் முயற்சி- இறந்த மணமகளின் தந்தையும் விழாவில் பங்கேற்பு!

ரியல்மி லேப்டாப் மாடல் 3-லெவல்

இந்த புதிய ரியல்மி லேப்டாப் மாடல் 3-லெவல் பேக்லிட் கீபோர்ட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இவற்றில் கைரேகை ரீடர் மற்றும்
ஹர்மானால் டியூன் செய்யப்பட்ட இரட்டை ஸ்பீக்கர் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த லேப்டாப் மாடலின்
வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்தியாவில் அறிமுகமான ரியல்மி 9ஐ- ரூ.13,999 மட்டுமே., 6ஜிபி ரேம், 50எம்பி கேமரா, டைனமிக் ரேம் விரிவாக்க வசதி!இந்தியாவில் அறிமுகமான ரியல்மி 9ஐ- ரூ.13,999 மட்டுமே., 6ஜிபி ரேம், 50எம்பி கேமரா, டைனமிக் ரேம் விரிவாக்க வசதி!

இன்டெல் கோர் ஐ5 11320H Willow Cove பிராசஸர் வசதி

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி புக் Enhanced Air மாடலில் இன்டெல் கோர் ஐ5 11320H Willow Cove பிராசஸர்வசதி உள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 3.2ஜிகாஹெர்ட்ஸ்
இன்டெல் எக்ஸ்இ கிராபிக்ஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி லேப்டாப் மாடல்.

7700எம்ஏஎச் பேட்டரி, 11-இன்ச் டிஸ்பிளேவுடன் மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ மாடல் அறிமுகம்.! விலை மற்றும் விவரங்கள்.!7700எம்ஏஎச் பேட்டரி, 11-இன்ச் டிஸ்பிளேவுடன் மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ மாடல் அறிமுகம்.! விலை மற்றும் விவரங்கள்.!

அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி புக்

புதிய ரியல்மி லேப்டாப் மாடலில் 16 ஜிபி ரேம் மற்றும் 512ஜபி NVMe SSD ஸ்டோரேஜ் வசதி உள்ளது. அதேபோல் இந்தலேப்டாப் சூடாவதை தவிர்க்க VC liquid cooling ஆதரவு உள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் மென்பொருள்
வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

BSNL: தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு கம்மி விலையில் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..BSNL: தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு கம்மி விலையில் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..

விண்டோஸ் 11 இயங்குதள வசதியுடன்

குறிப்பாக விண்டோஸ் 11 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி புக் Enhanced Air லேப்டாப். பின்பு 54Wh பேட்டரியைக் கொண்டுள்ளதுபுதிய ரியல்மி லேப்டாப். அதேபோல் இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணிநேர பேட்டரி ஆயுள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.இதுதவிர 65 வாட் பவர் அடாப்டருடன் வருகிறது இந்த புதிய லேப்டாப் மாடல்.

வைஃபை 6 802.11 ஏஎக்ஸ்

வைஃபை 6 802.11 ஏஎக்ஸ் (5ஜிகாஹெர்ட்ஸ்), புளூடூத் 5.2, ஒரு யுஎஸ்பி டைப்-சி 3.2 போர்ட், யுஎஸ்பி-ஏ 3.1 ஜென் 1 போர்ட்,தண்டர்போல்ட் 4 போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி லேப்டாப் மாடல்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme Book Enhanced Air Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X