Home
Computer

அட்டகாசமான Realme புக் ஏர் லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிய ரியல்மி புக் ஏர் (Realme Book Air) என்ற லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மி புக் ஏர் லேப்டாப்

ரியல்மி புக் ஏர் லேப்டாப்

குறிப்பாக இந்த ரியல்மி புக் ஏர் லேப்டாப் ஆனது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த லேப்டாப் அனைத்து
நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது இந்த லேப்டாப் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப்
பார்ப்போம்.

டிஸ்பிளே வசதி

டிஸ்பிளே வசதி

ரியல்மி புக் ஏர் லேப்டாப் ஆனது 14-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிடி டிஸ்பிளே என்பதால் கேமிங் வீடியோ போன்றவைகளுக்கு மிக அருமையாக இருக்கும். குறிப்பாக தினசரி லேப்டாப்பில் வேலை பார்க்கும் மக்களுக்கும் இது ஒரு சிறந்ததிரை அனுபவத்தை கொடுக்கும்.

ரியல்மி புக் ஏர் லேப்டாப்

அதேபோல் ரியல்மி புக் ஏர் லேப்டாப் ஆனது 1920 × 1200 பிக்சல்ஸ், 16:10 ரேஷியோ போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவை விட மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

 சிறந்த மென்பொருள்

சிறந்த மென்பொருள்

அதாவது ரியல்மி புக் ஏர் லேப்டாப் 11-வது ஜென் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் சிறந்த செயல்திறனை கொண்டது. அதேபோல் லேப்டாப்-ஐ தடையின்றி பயன்படுத்த உதவும்.

அதேபோல் இந்த லேப்டாப் சூடாவதை தடுக்க vapour cooling (VC) chamber ஆதரவும் உள்ளது. பின்பு பிளாஷ் மோட், ஸ்மார்ட் மோட், Quiet Mode போன்ற ஆதரவுகளையும் வழங்குகிறது இந்த புதிய ரியல்மி லேப்டாப்.

நிறங்கள்

நிறங்கள்

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி புக் ஏர் லேப்டாப். மேலும் ஐஸ் ப்ளூ மற்றும் ஸ்கை கிரே நிறங்களில் இந்த புதிய லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

ரியல்மி புக் ஏர் மாடலில் 54Wh பேட்டரி ஆதரவு உள்ளது. எனவே 13.5 மணிநேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 65W சூப்பர்-ஃபாஸ்ட் சார்ஜிங்
ஆதரவையும் கொண்டுள்ளது இந்த ரியல்மி லேப்டாப். குறிப்பாக இந்த லேப்டாப்-ஐ 30 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும்.

எச்டி கேமரா

எச்டி கேமரா

இந்த ரியல்மி புக் ஏர் மாடலின் முன்புறம் வீடியோ அழைப்புகளுக்கான எச்டி கேமராவும், டூயல் மைக்ரோபோன் ஆதரவும் உள்ளது. பின்பு இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

யுஎஸ்பி ஏ 3.2 ஜென் 1 போர்ட், இரண்டு யுஎஸ்பி டைப்-சி 3.2 ஜென் போர்ட், 3.5MM ஆடியோ ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி புக் ஏர் லேப்டாப். மேலும் இதன் ஆடியோவைப் பற்றி பேசுகையில், டிடிஎஸ் சரவுண்ட் சவுண்டிற்கான ஆதரவுடன் ஹர்மனின் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இவற்றுள் அடக்கம்.

மேலும் இந்த லேப்டாப் மாடலின் எடை 1.36 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி புக் ஏர் லேப்டாப் விலை

ரியல்மி புக் ஏர் லேப்டாப் விலை

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்ட ரியல்மி புக் ஏர் மாடலின் விலை Yuan 2,999 (இந்திய மதிப்பில் ரூ.35,400) ஆக உள்ளது. பினபு இதன் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை Yuan 3,299 (இந்திய மதிப்பில் ரூ.39,000) ஆக உள்ளது.

குறிப்பாக வரும் ஜூலை 19-ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது ரியல்மி புக் ஏர் லேப்டாப்.

ரியல்மி ஜிடி 2 எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன்

ரியல்மி ஜிடி 2 எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன்

இந்நிறுவனத்தின் லேப்டாப்-ஐ விட ஸ்மார்ட்போன்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ரியல்மி ஜிடி 2 எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதேபோல் பல அருமையான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ரியல்மி நிறுவனம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Realme Book Air Laptop Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X