Home
Computer

ஓர் முழுமையான வீடியோ கேம் அனுபவத்தை தரும் ஏசர் டேப்லெட்!

By Karthikeyan
ஓர் முழுமையான வீடியோ கேம் அனுபவத்தை தரும் ஏசர் டேப்லெட்!

லாஸ் வேகாசில் நடைபெறும் நுகர்வோர் மின்னனு கண்காட்சியில் பலவிதமான புதுவிதமான ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்புகள் மற்றும் டேப்லெட்டுகள் ஆகியவை நிறைந்து கிடக்கின்றன. அவற்றைப் பார்க்கும் போது ஆச்சரியம் மேலோங்குகிறது. அதிலும் குறிப்பாக வீடியோ கேமிங் நிறைந்த டிவைஸ்களை மக்கள் விரும்பி பார்க்கின்றனர்.

இந்தக் கண்காட்சியில் ரேசர் யுஎஸ்எ லிமிட்டட் தனது புதிய கேமிங் டேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டின் பெயர் ப்ராஜக்ட் பியோனா ஆகும். இந்த கேமிங் டேப்லெட் சூப்பரான டிசைனில் வந்திருக்கிறது. இந்த டேப்லெட் ஒரு முழுமையான வீடியோ கேம்ஸ் வசதிகொண்ட டேப்லெட் ஆகும். இது இருந்தால் பொழுதுபோக்கிற்கு வேறு எங்கும் செல்லத் தேவையில்லை.

இந்த ரேசர் டேப்லெட் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதேபோல் இது ஆப்பிளின் ஐபேடை ஒத்திருக்கிறது. ஆனால் இதில் ஒரு ஜோடி கேமிங் கண்ட்ரோலர்கள் இருக்கும். இந்த கண்ட்ரோலர்கள் இந்த டேப்லெட்டின் 2 பக்கங்களிலும் இருப்பதால் இதன் மூலம் சூப்பராக விளையாடலாம்.

லாஸ் வேகாஸ் கண்காட்சியில் ரேசர் இந்த பியோனா டேப்லெட்டின் செயல் திறனை மக்களுக்குக் காட்டியது. குறிப்பாக வார் ஹாமர் 40000 மற்றும் ஸ்பேஸ் மரைன் போன்ற கேம்கள் இந்த டேப்லெட்டில் அம்சமாக வந்து சென்றன.

ஏசரின் தலைமை இயக்குனர் மின் லியாங் டான் கூறும்போது இந்த பியோனா டேப்லட்டுதான் தற்போது அதிக வேகம் கொண்ட ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார். ஏனெனில் இந்த டேப்லெட் 3ஜி கோர் ஐ7 ப்ராசஸரைக் கொண்டுள்ளது.

அதோடு டிஎச்எக்ஸ்ஸால் தரச்சான்று பெற்ற ஆடியோ சிஸ்டமும் இந்த டேப்லெட்டில் இருப்பதால் இசை மழைக்கும் இதில் பஞ்சமில்லை. குறிப்பாக வீடியோ கேம் பிரியர்களின் சொர்க்கமாக இந்த டேப்லெட் இருக்கும் என நம்பலாம்.

இந்த பியோனா டேப்லட்டின் க்ராபிக்ஸ் திரில்லாக இருக்க வேண்டும் என்பதற்காக மின் லியாங் டான் அதன் க்ராபிக்ஸ் யூனிட்டைப் பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் இந்த டேப்லெட் மிகவும் தரம் வாய்ந்த என்விடியா அல்லது எடிஐ ஆகியவற்றின் ஜிபியுவைக் கொண்டிருக்கும் என நம்பலாம்.

அதுபோல் இந்த டேப்லெட்டின் பேட்டரியைப் பற்றியத் தகவல்களும் வரவில்லை. ஆனால் இதன் விலை 1000 அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும் இதன் செயல் திறன் பக்காவாக இருக்கும். மேலும் இது ப்ளேஸ்டேஷன் போர்ட்டபுளுக்கு போட்டியாக இருக்கும் என்பதி்ல ஐயமில்லை. ஆனால் இந்த டேப்லெட் பிசி வெர்சன் கேம்களை மட்டுமே இயக்க முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X