பிரத்யேக வீடியோ கேம் லேப்டாப்பை வழங்கும் ரேஸர்!

By Super
|

பிரத்யேக வீடியோ கேம் லேப்டாப்பை வழங்கும் ரேஸர்!
ரேஸர் நிறுவனம் தனது பார் கேமர்ஸ் மற்றும் பை கேமர்ஸ் என்ற தனது கொள்கை வாசகத்திற்கு ஏற்ப தனது வீடியோ கேம் லேப்டாப்பை களமிறக்கி இருக்கிறது.

கடந்த 1990ல் தொடங்கப்பட்ட ரேஸர் பிறகு சராசரியாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தமது அயராத உழைப்பின் மூலம் இந்நிறுவனம் வீடியோ கேமிங் அக்சஸரி விற்பனையில் முன்னனியில் இருக்கிறது.

கேம்களை உருவாக்குவதற்காக ரேஸர் நிறுவனம் சீனாவைச் சேர்ந்த இன்டர்நெட் நிறுவனமான டென்சன்ட்டுடன் ஒப்பந்தம் செய்து இருக்கிறது. தங்களது லேப்டாப்புகளில் இயக்குவதற்காக இந்த கேம்களை இந்நிறுவனம் உருவாக்குகிறது. மேலும் இந்நிறுவனத்தின் புதிய லேப்டாப்புகள் அடுத்த ஆண்டின் மத்தியில் வரும் என்று தெரிகிறது.

தமது லேப்டாப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் சீன சந்தையில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க ரேஸர் நிறுவனம் திட்டமிடுகிறது. டென்சன்டின் பல வீடியோ கேம்கள் ரேஸர் பிளேட் லேப்டாப்புகளில் இயங்குவதற்கு ஏற்றார்போல உருவாக்கப்படும். அதற்கு முன் ரேஸர் ஸ்விட்ச்ப்ளேட் என்ற சிறிய கேமிங் நோட்புக்கை அறிமுகப்படுத்தப் போவதாக ரேஸர் அறிவித்து இருந்தது. அதற்கான வேலையிலும் ரேஸர் நிறுவனம் தீவிரமாக இறங்கியிருக்கிறது.

கணினி உலகம் தற்போது கேமிங் லேப்டாப்புகளை அறிமுகப்படுத்துவதில் மிகத் தீவிரமாக இருக்கிறது. ரேஸர் ப்ளேட் சாதனமும் இந்த வகையான லேப்டாப்பாக வந்து வீடியோ கேம் ப்ரியர்களைத் திருப்திபடுத்தும். இந்த லேப்டாப் அலுமினியம் கலந்து உருவாக்கப்படுகிறது. மேலும் இது ஒரு போர்ட்டபுள் லேப்டாப்பாகவும் இருக்கும். மேலும் இதன் யூசர் இன்டர்பேஸ் கட்டிங் எட்ஜ் தொழில் நுட்பத்துடன் வருகிறது. இதன் அடர்த்தி 0.88 இன்ச் ஆகும். இதன் எடை 3.1 கிலோவாகும்.

இந்த லேப்டாப் இன்டல் ஐ7 பிராசஸரைக் கொண்டுள்ளது. அதுபோல் என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி 555 க்ராபிக்ஸ கார்டு மற்றும் என்விடியா ஆப்டிமஸ் தொழிநுட்பத்தையும் கொண்டுள்ளது. இதன் ரேமை எடுத்துக் கொண்டால் அது 8ஜிபி 1333எம்ஹெர்ட்ஸ் டிடிஆர்3 ஆகும். இதன் ஹார்டு டிஸ்க் 320ஜிபி மெமரியை கொண்டிருக்கும்.

இந்த ரேஸர் பிளேடின் திரை 17.3 இன்ட் அளவுடன் எல்இடி பேக்லிட் கொண்டு இருக்கிறது. இந்த திரையின் ரிசலூசன் 1920 x 1080 பிக்சல் ஆகும். இதன் பேட்டரி 60 வாட்சை கொண்டுள்ளது. இதனால் எவ்வளவு நேரம் வேண்டுமானால் இந்த லேப்டாப்பில் வீடியோ கேம் விளையாடலாம்.

இதன் கீபோர்டுக்கு அடுத்தபடியாக சிறந்த யூசர் இன்டர்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த இன்டர்பேஸ் வீடியோ கேம் விளையாடுபவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த இன்டர்பேஸ் 10 அடாப்டிவ் கீகளையும் மற்றும் எல்சிடி பேனலையும் கொண்டிருக்கிறது. இந்த எல்சிடி பேனல் மல்டி டச் வசதியையும் வழங்குகிறது. அதுபோல் இதன் எல்சிடி திரை வீடியோ கேமின் அனைத்து தகவல்களையும் வழங்குகிறது.

விலையைப் பார்த்தால் இந்த ரேஸர் ப்ளேடு ரூ.1,20,000 முதல் ரூ.1,40,000 வரை இருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X