ஆப்பிளுக்கு என்றுமே மவுசு தான்

By Keerthi
|

இன்று கணிப்பொறியில் இருந்து மொபைல் வரை முன்னொடியாக இருக்கும் ஆப்பிளின் பழைய கம்பியூட்டர் மாடல் ஒன்று விற்பனைக்கு வர இருக்கிறது.

இன்டர்நெட், ஐபாட், ஐபோன், டேப்லெட், மேக்புக் என்று உலகமே இன்று நவீன கணினியின் தாக்கத்தில் இயங்கிக் கொண்டுள்ளது.இவற்றுக்கெல்லாம் முன்னோடியாகவும், முதல் முயற்சியாகவும் தோன்றியது ‘ஆப்பிள்-1′ வகை கம்ப்யூட்டர் தான்.

இவ்வகை கம்ப்யூட்டரின் முதல் தயாரிப்பு 1976ம் ஆண்டு தொடங்கியது. ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீம் வோஸ்னியாக் ஆகியோரின் வடிவமைப்பான இந்த ஆப்பிள்-1 வகை கம்ப்யூட்டர்கள் அறிமுக காலத்தில் 666.66 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் 39 ஆயிரத்து 800 ரூபாய்) விற்கப்பட்டது.

இந்த விற்பனையில் முதல் கம்ப்யூட்டரை அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த டெட் பெர்ரி என்பவர் வாங்கினார்.

சுமார் 37 ஆண்டுகள் பயன்படுத்திய அந்த கம்ப்யூட்டரை அடுத்த வாரம் ஏலத்தில் விடப்போவதாக டெட் பெர்ரி அறிவித்துள்ளார்.இந்த கம்ப்யூட்டர் 5 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு (ரூ.3 கோடி) ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாதம் 24ம் தேதி முதல் அடுத்த (ஜுலை) மாதம் 9ம் தேதி வரை இணையதளத்தின் வாயிலாக இந்த ஏலம் நடைபெறுகிறது.இதே வகையிலான ஆப்பிள்-1 கம்ப்யூட்டரை ஜெர்மனியில் உள்ள ஓர் நிறுவனம் கடந்த மாதம் ஏலம் விட்டது.

அந்த கம்ப்யூட்டர் 6 லட்சத்து 71 ஆயிரத்து 400 டாலர்களுக்கு (சுமார் ரூ.4 கோடி) விலைபோனது குறிப்பிடத்தக்கது.

இதோ ஆப்பிளின் சில பிராடக்டுகள்...

ஆப்பிளுக்கு என்றுமே மவுசு தான்

ஆப்பிளுக்கு என்றுமே மவுசு தான்

ஆப்பிளுக்கு என்றுமே மவுசு தான்

ஆப்பிளுக்கு என்றுமே மவுசு தான்

ஆப்பிளுக்கு என்றுமே மவுசு தான்

ஆப்பிளுக்கு என்றுமே மவுசு தான்

ஆப்பிளுக்கு என்றுமே மவுசு தான்

ஆப்பிளுக்கு என்றுமே மவுசு தான்

ஆப்பிளுக்கு என்றுமே மவுசு தான்

ஆப்பிளுக்கு என்றுமே மவுசு தான்

ஆப்பிளுக்கு என்றுமே மவுசு தான்

ஆப்பிளுக்கு என்றுமே மவுசு தான்

ஆப்பிளுக்கு என்றுமே மவுசு தான்

ஆப்பிளுக்கு என்றுமே மவுசு தான்

ஆப்பிளுக்கு என்றுமே மவுசு தான்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X