முற்றிலும் மாறுபட்ட டிசைனில் அசத்தும் புதிய லேப்டாப்!

By Karthikeyan
|
முற்றிலும் மாறுபட்ட டிசைனில் அசத்தும் புதிய லேப்டாப்!

எல்லா லேப்டாப்புகளும் ஒரே டிசைனிலேயே வருகின்றன. மேலும் அவற்றை பார்த்து பழகிவிட்டதால் அதன் டிசைன் போரடிக்க ஆரம்பித்துவிட்டது. அதாவது சாதராணமாக லேப்டாப் 2 துண்டுகளாக வந்து அவை திரை மற்றும் கீபோர்டுடன் மடக்கி வைக்கக் கூடிய அளவில் வருகிறது. மேலும் லேப்டாப்புகள் ப்ளாஸ்டிக் அல்லது கம்புவண்ட் பேனல் போன்றவற்றால் தயாரிக்கப்படுகின்றன. அதனால் வித்தியாசமான டிசைனில் வரும் லேப்டாப் கண்டிப்பாக பழையவகை லேப்டாப்புகளை ஒதுக்கித் தள்ளிவிடும் என நம்பலாம்.

மோடர் ஜான் டும் ஒரு புதிய டிசைனில் சோனி வயோ எப் லேப்டாப்பை வடிவமைத்திருக்கிறார். இந்த டிசைனர் பாரம்பரிய லேப்டாப் டிசைனை முழுவதுமாக மாற்றி இருக்கிறார். அதாவது பாரம்பரியமாக லேப்டாப்புகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களை நீக்கிவிட்டு அதர்குப் பதிலாக ப்ளைவுட், பைன்வுட் தாமிரம் மற்றும் பிராஸ் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி இருக்கிறார். இந்த புதிய லேப்டாப் ஸ்டீம்பங் டிசைனில் வருகிறது. ஆனால் இதன் செயல்பாடு சாதாரண லேப்டாப்பைப் போலவே இருக்கும்.

இந்த புதிய வடிவமைப்பில் வரும் டிவைஸ் இகாக் மெர்குரி ஆகும். இந்த லேப்டாப்பின் வெளிப்பகுதி மற்றும் அடிப்பகுதி மரப்பலகையினால் மூடப்பட்டுள்ளது. இந்த மரப்பலகை பாலிஷ் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டுள்ளதால் அது ரெட்ரோ லுக்கைக் கொடுக்கும்.

அதுபோல் தொடு தளத்தின் இருபக்கமும் மென்மையான டெக்ஸ்டைல் பேடிங் உள்ளதால் உள்ளங்கையில் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் பல மணி நேரம் லேப்டாப்பில் வேலை செய்ய முடியும். மேலும் கீபோர்டில் வட்ட வடிவமான கீகள் இருக்கும். அதனால் டைப் செய்வதற்கு இதமாக இருக்கும். மேலும் இந்த லேப்டாப் ஒரு சொகுசான லேப்டாப் ஆகும். மேலும் இணைப்பு போர்ட்டுகள் இன்டிக்கேட்டர் விளக்குகள் ஆகியவை பழைய இடங்களிலேயே இருக்கின்றன.

கையில் பணம் அதிகமாக இருந்தால் இத்தகைய டிசைனில் லேப்டாப்பை வடிவமைத்து அதை சொந்தமாக்கிக் கொள்ளலாம். ஆனால் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X