Home
Computer

இந்தியாவில் களமாட வரும் பாக்கட்புக் ஏ-10 டேப்லட்

By Super
இந்தியாவில் களமாட வரும் பாக்கட்புக் ஏ-10 டேப்லட்
பெர்லினில் நடந்த ஐஎப்எ நிகழ்ச்சியில் தரத்திலும் தொழில் நுட்பத்திலும் சிறந்த ஏராளமான டேப்லட்டுகள் பார்வைக்காக வைக்கப்பட்டன. அதில், அனைத்து டேப்லெட்டுகளும் ஒரே மாதிரியான சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகளை கொண்டிருந்தது. ஆனால், அதில் ஒன்று மட்டும் எல்லோரின் பார்வையிலும் தனித்துவமாக தெரிந்தது.

அது பாக்கெட்புக் என்ற நிறுவனத்தின் பாக்கட்புக் ஏ-10 டேப்லட்டாகும். இந்தியாவில் இந்த நிறுவனம் பிரபலமாக இல்லாவிட்டாலும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நிறுவனம் மிகவும் பிரபலமான நிறுவனம்.

இந்த பாக்கெட்புக் ஏ-10 டேப்லெட்டின் எடை 1.5 பவுண்டுகள் மட்டுமே. இதன் டிஸ்ப்ளே 10.1 இன்ச் கொண்டு இருக்கிறது. இதன் கெப்பாசிட்டிவ் தொடுதிரை டிஎப்டி எல்சிடி டிஸ்ப்ளேயுடன் 1024 x 768 பிக்ஸல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு 2.3.4 ஜிஞ்சர்ப்ரீட் ஓஎஸ் கொண்ட ஆண்ட்ராய்டு லேப்டாப்பாகும்.

மேலும், இது 1 ஜிகாஹெர்ட்ஸ் டிஐ ஒஎம்எபி 3621 சிங்கிள்-கோர் டெக்ஸஸ் இன்ஸ்ட்ரூமென்டஸ் ப்ராசஸர் கொண்டுள்ளதால் இது அதிவேகமாக செயல்படும். மேலும், 512எம்பி ராம் கொண்டுள்ளதால் இதன் வேகத்திற்கு தடை போட முடியாது.

பாக்கெட்புக்கின் ஏ-10 4ஜிபி இண்டர்னல் மெமரியுடன் 64ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரி சேமிப்பைக் கொண்டுள்ளதால் இதை ஒரு பெரிய சேமிப்பு வங்கி என்றே சொல்லலாம். மேலும் இந்த டேப்லெட் மைக்ரோ எஸ்டி மெமரி கார்டுகளை மட்டுமே சப்போர்ட் செய்கிறது.

இந்த பாக்கெட்புக்கின் கேமரா 2 மெகா பிக்ஸல் ஆகும். எனவே, எச்டி வீடியோ ரிக்கார்டிங் இதில் சாத்தியமில்லை. மேலும் இந்த ப்ளாஷ் வசதி இல்லாததால் இருளில் தெளிவான படங்களை எடுக்க முடியாது. இந்த குறை இருந்தாலும் இந்த டேப்லட் 3ஜி கம்பாட்டிபிலிட்டி பெற்றுள்ளது. மேலும் அதிவிரைவாக இயங்கக்கூடிய 802.11 பி/ஜி/என் வைபை கொண்டுள்ளதால் கேமரா குறையை இது நிவர்த்தி செய்துவிடும்.

இந்த புதிய பாக்கெட்புக் ஏ-10 டேப்லட் ஒரு கையடக்கம் கொண்ட டேப்லெட்டாகும். இதில் உள்ள பில்ட் இன் சாப்ட்வேரில் அப்டேட் இல்லையென்றாலும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களை நாம் எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சாதாரண 3ஜி டேப்லட் விரும்புவோருக்கு இந்த புதிய பாக்கெட்புக் ஏ-10 டேப்லட் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

இந்தியாவில் இதன் விலை ரூ.12,000 மாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவிற்குகூட வராத நிலையில் இது விரைவாக இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X