பேஸ்புக் அக்கவுண்டை நிரந்திரமாக நீக்க வேண்டுமா?

By Keerthi
|

இன்று எதாவது ஒரு சமூக வலைத் தளத்திலாவது இன்றைய கம்ப்யூட்டர் பயனாளர்கள் தங்களுக்கென பதிவு ஒன்றைக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் முன்னணியில் உள்ளன. இவற்றை நாடி, தங்களுக்கென அக்கவுண்ட் பதிவு ஒன்றை அமைப்பது மிக மிக எளிது.

ஆனால், அந்த அக்கவுண்ட்டினை முடித்துக் கொள்வது அவ்வளவு எளிதான வழியாகக் காட்டப்படவில்லை. அவ்வாறு பதிவை ரத்து செய்து முடித்துக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டாலும், நாம் ஏற்கனவே அவற்றில் அமைத்த பதிவுகளையும், நம் தொடர்புகளையும் பதிந்து எடுத்து வைத்துக் கொள்ள ஆசைப்படுவோம்.

கீழே குறிப்பிட்டுள்ள வழிககளை நீங்கள் பின்பற்றினால் உங்கள் அக்கவுண்டை முழுமையாக டி ஆக்டிவெட் செய்யலாம்

பேஸ்புக் அக்கவுண்டை நிரந்திரமாக நீக்க வேண்டுமா?

Click Here For New Smartphones Gallery

பேஸ்புக்:

இன்றைய நிலையில், மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக இணைய தளம் இதுவாகத்தான் இருக்கும். இதில் உள்ள பதிவினை முடிவிற்குக் கொண்டு வர எண்ணினால், உங்களுக்கு இரண்டு வழிகள் தரப்படுகின்றன.

இதனை மேற்கொள்ள முதலில் deactivation பக்கத்திற்குச் செல்லவும். சென்றவுடன், நீங்கள் உங்கள் பேஸ்புக் நண்பர்களை இனித் தொடர்பு கொள்ள முடியாது, இது உங்களுக்கு இசைவா? என ஒரு செய்தி தரப்படும்.

அதே நேரத்தில், நீங்கள் ஏன் பேஸ்புக் தளத்தினை விட்டு விலகுகிறீர்கள் எனக் கட்டாயமாகக் காரணத்தைப் பதிய வேண்டியதிருக்கும். இதனை முடித்த பின்னர், Confirm என்பதில் கிளிக் செய்தால், உங்கள் அக்கவுண்ட் பதிவு மறைந்துவிடும்.

இனி, மீண்டும் நீங்கள் பதிவினைப் புதுப்பித்தால் மட்டுமே, நண்பர்களுடன் நீங்களும், நீங்கள் உங்கள் நண்பர்களுடனும் பேஸ்புக் வழியாகத் தொடர்பு கொள்ள முடியும். புதுப்பிக்க வழக்கம் போல அக்கவுண்ட் லாக் இன் செய்தாலே போதும்.

இப்படி இல்லாமல், நமக்கு இந்த பேஸ்புக் தொடர்பே வேண்டாம் என்று முடிவு செய்தால், நீங்கள் account removal பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

இங்கு Delete My Account என்ற பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். கிளிக் செய்தவுடன், மீண்டும் உங்கள் பாஸ்வேர்ட் கேட்டு உறுதி செய்யப்படும். பின்னர், அங்கு கிடைக்கும் கேப்சா சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இங்கு உங்கள் அக்கவுன்ட் நிரந்திரமாக அழிக்கப்பட்டுவிடும், மீண்டும் உங்களால் ரீ ஆக்டிவேட் செய்ய முடியாது.

ட்விட்டர்:

அடுத்ததாக, பிரபலமாக இயங்கும் சமூக இணைய தளம் ட்விட்டர். இதிலிருந்து நீங்கள் விலக வேண்டுமெனில் ட்விட்டர் இணைய தளத்திற்கு வழக்கம் போலச் செல்லுங்கள்.

உங்கள் அக்கவுண்ட் பதிவில் நுழையுங்கள். இணைய தளப் பக்கத்தில், வலது மேல் மூலையில் காணப்படும் சிறிய சக்கர ஐகானில் கிளிக் செய்திடுங்கள்.

இப்போது கிடைக்கும் பக்கத்தில் கீழாகக் காட்டப்படும் ‘Deactivate my account' என்ற தொடர்பில் கிளிக் செய்திடுங்கள். இதில் உள்ள பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு ஓர் எச்சரிக்கை கிடைக்கும்.

தற்காலிகமாக உங்கள் அக்கவுண்ட் பதிவு நீக்கப்படு வதாகவும், தொடர்ந்து 30 நாட்கள் எந்த செயல்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என்றால், உங்கள் பதிவு நீக்கப்படும் என்று ஒரு செய்தி காட்டப்படும்.

இந்த 30 நாட்களில், மீண்டும் ட்விட்டர் இணையதளத் தொடர்பு தேவை என நீங்கள் எண்ணினால், வழக்கம் போல லாக் இன் செய்து தொடரலாம்.

கூகுள் ப்ளஸ்:

கூகுள் இணைய தளத்தின் ஒரு பிரிவான, கூகுள் ப்ளஸ் பிரிவில் உள்ள உங்கள் அக்கவுண்ட்டினை, முழுவதுமாகவே நீங்கள் நீக்கிவிடலாம்.

இதற்கு முதலில் கூகுள் இணையதளம் செல்லுங்கள். வலது மேல் மூலையில் உள்ள உங்கள் அக்கவுண்ட் லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

இங்கு மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும்.நீங்கள் கூகுள் ப்ளஸ் தொடர்பிலிருந்து விலக விரும்பினால், ‘Delete profile and remove related Google+ features' என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

இவற்றில் எந்த சேவை எல்லாம் தேவை இல்லையோ, அவற்றை டிக் செய்திடவும். பின்னர் ‘Remove selected services' என்பதில் கிளிக் செய்திடவும்.

இதற்குப் பதிலாக ‘Delete your entire Google profile' என்பதில் கிளிக் செய்தால், யூட்யூப் மற்றும் குகூள் பஸ் முதற்கொண்டு பல சேவைகளை நீங்கள் இழக்க வேண்டியதிருக்கும்.

உங்கள் அக்கவுண்ட்டினை முழுமையாக நீக்க எண்ணினால், உங்கள் அக்கவுண்ட் பிரிவில் Account Management என்பதில் உள்ள ‘Close account and delete all services and information associated with it' என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

மீண்டும் உங்கள் பாஸ்வேர்ட் கேட்கப்பட்டு உறுதி செய்யப்படும். மீண்டும் ஒருமுறை ‘Yes, I want to delete my account' என்ற பட்டனில் கிளிக் செய்திட வேண்டியதிருக்கும்.

இப்பொழுது உங்கள் அக்கவுண்ட் முழுமையாக நீக்கப்பட்டிருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X