பேன்டல் மற்றும் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும் புதிய படைப்பு!

By Super
|

பேன்டல் மற்றும் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும் புதிய படைப்பு!
சிறந்த தொலை தொடர்பு சேவை என்று அனைவரின் மனதிலும் பதிந்த பிஎஸ்என்எல் நிறுவனம் பென்டா டி-பேட் டபிள்யூஎஸ்-702-சி என்ற புதிய டேப்லட்டினை வழங்குகிறது. இதற்கும் முன்பு பேன்டல் நிறுவனத்துடன் இணைந்து

பல டேப்லட்களை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய டேப்லட்தான் இந்த டி-பேட் டபிள்யூஎஸ்-702-சி டேப்லட்.

இந்த டேப்லட்டில் வழங்கப்பட்டிருக்கும் புதிய தொழில் நுட்பங்களின் தகவல்களை பற்றி பார்க்கலாம். இதன் 7 இஞ்ச் திரையில் 1024 X 600 பிக்ஸல் திரை துல்லியத்தினையும், மல்டி தொடுதிரை வசதியினையும் இந்த டேப்லட் சிறப்பாக வழங்கும்.

ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த டேப்லட். 1.2ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸர் மூலம் இந்த டேப்லட்டின் இயங்குதளம் இன்னும் சிறப்பாக இயங்கும்.

இதன் இன்டர்னல் மெமரி வசதியில் அதிகபட்சமாக 8 ஜிபி வரை பெற முடியும். இந்த மெமரி வசதியினை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும். விஜிஏ முகப்பு கேமரா வசதியினை கொடுக்கும் இந்த டேப்லட்டில் 2 மெகா பிக்ஸல் கேமராவினையும் பெறலாம்.

2ஜி சிம் கார்டு ஸ்லாட் மற்றும் 3ஜி டோங்கில் வசதிகளை கொடுக்கும் இந்த டேப்லட், வைபை வசதிக்கும் சிறப்பாக சப்போர்ட் செய்யும். இதனால் 6 மணி நேரம் பேட்டரி பேக்கப் வசதியினை சுலபமாக பெற்று பயனடைய முடியும். 3டி வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த டேப்லட் ரூ. 7,499 விலையினை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X