Home
Computer

வாய்ஸ் காலிங் வசதியுடன்கூடிய குறைந்த விலை டேப்லெட்டைக் களமிறக்கும் பேண்டல்

By Karthikeyan
வாய்ஸ் காலிங் வசதியுடன்கூடிய குறைந்த விலை டேப்லெட்டைக் களமிறக்கும் பேண்டல்

பேண்டல் நிறுவனம் ஒரு புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டை இன்று களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு டபுள்யுஎஸ்802சி-2ஜி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆன்ட்ராய்டு டேப்லெட் பல சூப்பரான தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக இந்த டேப்லெட் ஒரு சூப்பரான 8 இன்ச் கப்பாசிட்டிவ் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. அதோடு கால் செய்ய ஒரு சிம் கார்டை வைத்திருக்கும் வசதியையும் இந்த டேப்லெட்டில் பார்க்கலாம்.

இந்த டேப்லெட் 1.2 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி சேமிப்பு மற்றும் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளம் போன்ற வசதிகளைக் கொண்டிருப்பதால் இதன் வேகம் அபாரமாக இருக்கும் என்று நம்பலாம். இணைப்பு வசதிகளுக்காக யுஎஸ்பி போர்ட், 3ஜி டோங்குள் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு வசதி போன்றவற்றையும் இந்த டேப்லெட் கொண்டிருக்கிறது.

பேண்டல் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் வர்த்தக ஒப்பந்தம் கொண்டிருப்பதால் இந்த புதிய டேப்லெட்டை வாங்கும் போதே 2 மாதங்களுக்குரிய 4ஜிபி டேட்டா கொண்ட பிஎஸ்என்எல் இணைப்பும் வழங்கப்படுகிறது.

மேற்சொன்ன அட்டகாசமான வசதிகளுடன் வரும் இந்த டேப்லெட் ரூ.8,299க்கு விற்கப்படுகிறது. மேலும் பேண்டல் ரூ.1,499க்கு ஒரு கீபோர்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் வழங்குகிறது. இந்த டேப்லெட் மைக்ரோமேக்சின் பன்புக் டாக் டேப்லெட்டுக்கு போட்டியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X