Home
Computer

வாட்டர் புரூப் வசதியுடன் புதிய டேப்லெட்!

By Karthikeyan
வாட்டர் புரூப் வசதியுடன் புதிய டேப்லெட்!

பான்டெக் நிறுவனம் இப்போது பான்டெக் எலமென்ட் என்ற புதிய டேப்லெட்டைக் களமிறக்குகிறது. இந்த டேப்லெட்டின் முக்கிய அம்சம் என்னவென்றால் இது சிறிது நேரம் தண்ணீருக்குள் விழுந்தாலும் ஒரு பாதிப்பும் அடையாது. இந்த டேப்லெட்டின் உட்புறம் டாக்குமென்டேசன், மைக்ரோ யுஎஸ்பி கேபிள் மற்றும் வால் சார்ஜர் போன்றவை உள்ளன.

இந்த டேப்லெட் தண்ணீர் தடுப்பு வசதி கொண்டிருந்தாலும் இது 30 நிமிடங்களுக்கு மேல் ஒரு மீட்டர் ஆழத்தில் உள்ள நீரில் கிடந்தால் கண்டிப்பாக பாதிப்பு அடையும். இதுபோன்று தண்ணீர் தடுப்பு வசதியை மற்ற டேப்லெட்டுகளில் பார்க்க முடியாது.

இந்த பான்டெக் டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 8 இன்ச் அளவில் ஒரு தொடு திரையைக் கொண்டுள்ளது. இந்த திரையில் பிக்சல் ரிசலூசன் 1024 x 768 ஆகும். அதுபோல் அதிகமான சக்தி கொண்ட க்யூவல்காம் ஸ்நாப்ட்ராகன் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது இந்த டேப்லெட். மேலும் இதில் 4ஜி வசதியும் உண்டு.

இந்த டேப்லெட்டின் ரேம் 1ஜிபி ஆகும். அதுபோல் மின் திறனிற்காக இது 6400 மெகா ஹெர்ட்ஸ் லயன் பேட்டரியைத் தாங்கி வருகிறது. அதுபோல் கேமராவைப் பார்க்கும் போது ப்ளாஷ் வசதி கொண்ட 5எம்பி பின்பக்க கேமராவும் அதே நேரத்தில் 2எம்பி முகப்பு கேமராவும் இந்த டேப்லெட்டில் உள்ளன. இந்த முகப்பு கேமரா வீடியோ அழைப்புக்கும் உதவி செய்யும்.

இணைப்பு வசதிக்காக இந்த பான்டெக் டேப்லெட் மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட், ஜிபிஎஸ் வசதி, ப்ளூடூத் வி2.1 மற்றும் வைபை போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. இந்த டேப்லெட் கடினமான பணிகளையும் மிக எளிதாகச் செய்து முடிக்கும். இந்த பான்டெக் டேப்லெட்டின் விலை ரூ.25,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X