Home
Computer

மலிவு விலையில் வரும் ஆன்ட்ராய்டு மீடியா டேப்லட்

By Super
மலிவு விலையில் வரும் ஆன்ட்ராய்டு மீடியா டேப்லட்
புதிய ஆண்ட்ராய்டு மீடியா டேப்லட் கூடிய விரைவில் நமது கைகளில் தவழ இருக்கிறது. ஆம், பான்டிஜிட்டல் சூப்பர்நோவா ஆண்ட்ராய்டு மீடியா டேப்லட் என்ற புதிய டேப்லட் ஆண்ட்ராய்டு சந்தையிலிருந்து களமிறங்க இருக்கிறது. அது ஆண்ட்ராய்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். ஆண்ட்ராய்டு ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்கும் இந்த புதிய டேப்லட் வரும் நவம்பர் மாதம் நமது கைகளுக்கு வந்துவிடும்.

பான்டிஜிட்டல் சூப்பர்நோவா ஆண்ட்ராய்டு மீடியா டேப்லட்டின் சிறப்புகளைப் பார்த்தால் இது 1ஜிஹெர்ட்ஸ் கோர்டக்ஸ் ஓ8 ப்ராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 2.3 வெர்சனையும் கொண்டிருக்கும். அதனால் அதன் செயல் திறன் மிக அமர்க்களமாக இருக்கும். இதன் திரை 8 இன்ச் ஆகும். இந்தத் திரை கப்பாசிட்டிவ் மல்டி டச் எல்சிடி தொழில் நுட்பம் கொண்டது. திரையின் ரிசலூசன் 600X800பி ஆகும். மேலும் இதன் திரையில் 2-ஆக்சிஸ் அக்சிலரோமீட்டரும் உள்ளது.

பான்டிஜிட்டல் சூப்பர்நோவா ஆண்ட்ராய்டு மீடியா டேப்லட்டில் ரியரிலும் முகப்பிலுமாக 2 கேமராக்கள் உள்ளன. அதனால் படங்கள் மிகத் தெளிவாக இருக்கும். மேலும் இதில் நீண்ட நேரம் வீடியோ ரிக்கார்டிங் செய்ய முடியும். ஏனெனில் இதில் சக்தி வாய்ந்த பேட்டரி உள்ளது. அதாவது இது லை-யன் பேட்டரியை கொண்டுள்ளது. இதை ரீஜார்ஜ் செய்ய முடியும். மேலும் இந்த பேட்டரி 6 மணி நேரத்திற்கும் மேலாக தாங்கும் சக்தி வாய்ந்தது.

பான்டிஜிட்டல் சூப்பர்நோவா ஆண்ட்ராய்டு மீடியா டேப்லட் மல்டி மீடியாவை சப்போர்ட் செய்யும். இதன் வீடியோ மற்றும் ஆடியோ ப்ளேயர்கள் எம்பி3, டபுள்யுஎவி, எம்பிஇஜி4 மற்றும் எஎசி போன்ற பைல்களை சப்போர்ட் செய்யும். அதுபோல் இதன் வைபை மற்றும் ப்ளூடூத் போன்றவை மிகவும் தரம் வாய்ந்தவை.

பான்டிஜிட்டல் சூப்பர்நோவா ஆண்ட்ராய்டு மீடியா டேப்லட் ஆடோப் ப்ளாஷ் 10.3 அப்ளிகேசனையும் கொண்டிருக்கிறது. அதுபோல் பேஸ்புக், யுடியூப் மற்றும் ட்விட்டர் மற்றும் யு ப்ளேயர் போன்ற சோஷியல் நெட்வொர்க்குகளையும் சப்போர்ட் செய்கிறது.

பான்டிஜிட்டல் சூப்பர்நோவா ஆண்ட்ராய்டு மீடியா டேப்லட் நமது கற்பனைக்கும் அப்பால் மிக உயரத்தில் இருக்கும். ஆனால் இதன் விலையைப் பார்த்தால் மிகவும் குறைவே. அதாவது ரூ.10000க்கு வருகிறது. இந்த டேப்லட் இபேயில் வருவதால் இதைப் பெறுவது சற்று கடினமாக இருக்கிறது. ஆனால் இதன் விலைக்கும் அதிகமாக இதன் செயல் திறன் அட்டகாசமாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X