Subscribe to Gizbot

மகாசக்தியுடன் வரும் புதிய பானாசோனிக் டேப்லெட் கம்ப்யூட்டர்

Posted By: Shajahan
மகாசக்தியுடன் வரும் புதிய பானாசோனிக் டேப்லெட் கம்ப்யூட்டர்

டேப்லெட் சந்தையில் இப்போது ஏராளமான உற்பத்தியாளர்கள் போட்டியிடுகின்றனர். பானாசோனிக் நிறுவனம் இப்போது அந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது. டேப்லட் துறை மிக வேகமாக வளர்ந்து வருவதால் புதிய சிந்தனையுடன் மற்றும் நவீன தொழில் நுட்பம் கொண்டு வரும் டேப்லட்டுகள் மட்டுமே தாக்கு பிடிக்க முடியும்.

டேப்லெட்டுகள் ஒரு மொபைல் டிவைஸாக இருப்பதால் மேசை கணினியை விட அதன் பயன்பாடு அதிகம். குறிப்பாக பெரும்பாலும் பயணத்திலேயே இருப்பவர்கள் இந்த உலகத்தோடு தொடர்பு கொள்வதற்கு டேப்லெட் மிகச் சிறந்த கருவியாக இருக்கிறது. அதனால் தரம் இல்லாத டேப்லெட்டுகள் நீண்ட நாள் வாடிக்கையாளர்களின் கரங்களில் தவழ முடியாது.

டப்பேட் ஏ-1 என்ற பெயரில் புதிய டேப்லட்டை பானாசோனிக் அறிமுக்பபடுத்துகிறது. இந்த டேப்லெட் மிகுந்த தரத்துடனும் நவீன் தொழில் நுட்பத்துடனும் வருவதால் இது அனைவராலும் விரும்பப்படும் என நம்பலாம். குறிப்பாக இந்த டேப்லட் சூரிய ஒளி மற்றும் மழை ஆகிய இயற்கை சக்திகளின் தாக்கத்தை மிக எளிதாகத் தாங்கக்கூடியது.

பானாசோனிக் டப்பேட் ஏ-1ன் பரப்பைப் பார்த்தால் அது 267 x 211 x 17மிமீ ஆகும். மேலும் இதன் எடை 966 கிராம் மட்டுமே. குறிப்பாக இந்த டேப்லட் இயற்கை சக்திகளை மிக எளிதாகத் தாங்கக்கூடியது. மேலும் இது தண்ணீர் தடுப்பு மற்றும் தூசு தடுப்பு வசதி கொண்டிருப்பதால் இதை வெளியில் எடுத்துச் செல்லும் போது மழை பெய்தாலோ அல்லது தூசி நிறைந்திருந்தாலோ அவை இந்த டேப்லெட்டைப் பாதிப்பதில்லை.

இதன் இன்னொரு முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் இது தட்பவெப்ப தடுப்பு வசதியும் கொண்டுள்ளது. அதனால் இந்த டேப்லட்டை அதிக குளிர் நிறைந்த பகுதியான அண்டார்டிக்காவில் பயன்படுத்தினாலும், அல்லது வெயில் வாட்டி எடுக்கும் சகாரா பாலைவனத்தில் பயன்படுத்தினாலும் இந்த டேப்லெட் மிக உறுதியாக இயங்கும் வலிமை கொண்டது. எனவே இதை ஒரு டஃப் டேப்லெட் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.

பானாசோனிக் டப்பேட் ஏ-1 டேப்லட்டின் டிஸ்ப்ளே 10.1 இன்ச் அளவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேயின் ரிசலூசன் 768 X 1024 பிக்சல் ஆகும். மேலும் இதன் திரை கெப்பாசிட்டிவ் வசதி கொண்டு மல்டி டச்சை சப்போர்ட் செய்கிறது.

இதன் 4590எம்எஎச் பேட்டரி பல மணி நேரம் மின் திறனைக் கொடுக்கும் சக்தி கொண்டது. இதன் ப்ராசஸரைப் பார்த்தால் அது டூவல் கோர் 1200 எம்ஹெர்ட்ஸ் மார்வெல் ப்ராசஸர் ஆகும். இந்த டிவைசின் மெமரி 1024எம்பி ஆகும். அதனால் இதன் வேகம் மிக தாறுமாறாக இருக்கும்.

பானாசோனிக் டப்பேட் ஏ-1 டேப்லட் சேமிப்பிற்காக இன்பில்ட் 16384 எம்பி இட அளவைக் கொண்டுள்ளது. மேலும் எக்ஸ்டர்னல் மெமரி கார்டும் உள்ளதால் இதன் மெமரியை மேலும் விரிவுபடுத்த முடியும். அதாவது மைக்ரோ எஸ்டி கார்ட் மற்றும் மைக்ரோ எஸ்டிஎச்சி கார்டுகள் மூலம் இதன் மெமரியை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும்.

பானாசோனிக் டஃப்பேட் எ1 டேப்லட் 2 கேமராக்களைக் கொண்டுள்ளது. அதாவது இதன் ரியர் 5 மெகா பிக்சல் கேமரா ஆட்டோ போக்கஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்டு வருகிறது. அதுபோல் இதன் முகப்பு கேமரா மூலம் மிக அருமையாக வீடியோ காலிங் செய்ய முடியும்.

பானாசோனிக் டஃப்பேட் எ1 டேப்லட் ஆன்ட்ராய்டு 3.2 வெர்சன் இயங்கு தளத்தில் இயங்குகிறது. இதில் ப்ளூடூத் 2.1 மற்றும் வைபை இணைப்பும் உள்ளது. அதோடு யுஎஸ்பி 2.0 போர்ட் கொண்ட மைக்ரோ யுஎஸ்பி கனக்டர் மூலம் மிக விரைவாக தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.

பானாசோனிக் டப்ஃபேட் ஏ1 டேப்லட்டின் விலை அறிவுக்கப்படவில்லை. ஆனால் அது இப்போதே மிக அதிகமான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot