Home
Computer

சின்ன சைஸ் சூட்கேஸ் போன்று லேப்டாப் அறிமுகம் செய்த Panasonic: விலை எவ்வளவு தெரியுமா?

சமீபத்தில் ரியல்மி, ரெட்மி நிறுவனங்கள் அசத்தலான லேப்டாப் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்போது இந்நிறுவனங்களுக்கு போட்டியாக பானாசோனிக் நிறுவனம் ஒரு அருமையான லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

 புதிய பானாசோனிக் லேப்டாப்

புதிய பானாசோனிக் லேப்டாப்

அதாவது பானாசோனிக் நிறுவனம் தற்போது Panasonic Toughbook 40 என்ற லேப்டாப் மாடலை தான் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்-ஐ பார்ப்பதற்கு ஒரு சின்ன சைஸ் சூட்கேஸ் போலவே உள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போது இந்த லேப்டாப் மாடலின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 தனித்துவமான வடிவமைப்பு

தனித்துவமான வடிவமைப்பு

பானாசோனிக் Toughbook 40 லேப்டாப் ஆனது 14-இன்ச் ஃபுல் எச்டி டச் ஸ்கிரீன் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதுபோன்ற டச் ஸ்கிரீன் ஒரு தனி அனுபவத்தை கொடுக்கும். அதாவது ஸ்மார்ட்போன் போன்று நீங்கள் நினைத்த ஆப்ஸ்களை எளிமையாக பயன்படுத்த முடியும்.

அதேபோல் 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப். மேலும் backlit ஆதரவு கொண்ட கீபோர்ட் போன்ற பல சிறப்பான அம்சங்களை வழங்குகிறது இந்த புதிய லேப்டாப். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அருமையான பிராசஸர்

அருமையான பிராசஸர்

புதிய பானாசோனிக் லேப்டாப் ஆனது 11-வது ஜென் ஐ5 மற்றும் ஐ7 இன்டெல் விப்ரோ பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக Intel Iris Xe கிராபிக்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த பானாசோனிக் Toughbook 40 லேப்டாப். எனவே இந்த லேப்டாப் மாடலை நம்பி வாங்கலாம்.

 அட்டகாசமான பேட்டரி

அட்டகாசமான பேட்டரி

பானாசோனிக் Toughbook 40 லேப்டாப் மாடல் ஆனது இரண்டு பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே 36மணி நேரம் பேட்டரி பேக் அப் கிடைக்கும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக நீங்கள் இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் சார்ஜ் பற்றிய கவலையே இருக்காது.

சிறந்த பாதுகாப்பு அம்சம்

சிறந்த பாதுகாப்பு அம்சம்

குறிப்பாக புதிய பானாசோனிக் லேப்டாப் மாடல் தண்ணீர் பட்டாலும் சேதமடையாத வாட்டர் ரெசிஸ்டன்ஸ் தன்மை கொண்டது. மேலும் இந்த புதிய லேப்டாப் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.

 ஃபுல் எச்டி வெப்கேமரா

ஃபுல் எச்டி வெப்கேமரா

5எம்பி ஃபுல் எச்டி வெப்கேமரா ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த பானாசோனிக் லேப்டாப் மாடல். குறிப்பாக இந்த புதிய சாதனம் விண்டோஸ் 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பானாசோனிக் Toughbook 40 லேப்டாப் விலை

பானாசோனிக் Toughbook 40 லேப்டாப் விலை

பானாசோனிக் Toughbook 40 லேப்டாப் மாடலின் ஆரம்ப விலை ரூ.3.75 லட்சம். குறிப்பாக இந்த புதிய லேப்டாப் ஆனது பானாசோனிக் ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சமீபத்தில் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ரியல்மி புக் ஏர் லேப்டாப் மாடலைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி புக் ஏர் லேப்டாப்

ரியல்மி புக் ஏர் லேப்டாப்

ரியல்மி புக் ஏர் லேப்டாப் ஆனது 14-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. தினசரி லேப்டாப்பில் வேலை பார்க்கும் மக்களுக்கும் இது ஒரு சிறந்ததிரை அனுபவத்தை கொடுக்கும்.

அதேபோல் 1920 × 1200 பிக்சல்ஸ், 6:10 ரேஷியோ போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ரியல்மி புக் ஏர்லேப்டாப் மாடல்.

 ரியல்மி புக் ஏர் லேப்டாப் பிராசஸர்?

ரியல்மி புக் ஏர் லேப்டாப் பிராசஸர்?

ரியல்மி புக் ஏர் லேப்டாப் 11-வது ஜென் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த லேப்டாப் சூடாவதை தடுக்கvapour cooling (VC)chamber ஆதரவும் உள்ளது. பின்பு பிளாஷ் மோட், ஸ்மார்ட் மோட், Quiet Mode போன்ற ஆதரவுகளையும் வழங்குகிறது இந்த புதிய ரியல்மி லேப்டாப்.

ரியல்மி புக் ஏர் லேப்டாப் நிறங்கள்

ரியல்மி புக் ஏர் லேப்டாப் நிறங்கள்

ஐஸ் ப்ளூ மற்றும் ஸ்கை கிரே நிறங்களில் இந்த ரியல்மி புக் ஏர் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி லேப்டாப்.

ரியல்மி புக் ஏர் மாடலில் 54Wh பேட்டரி ஆதரவு உள்ளது. கண்டிப்பாக 13.5 மணிநேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 65W சூப்பர்-ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய லேப்டாப் மாடல்.

ரியல்மி புக் ஏர் விலை

ரியல்மி புக் ஏர் விலை

யுஎஸ்பி ஏ 3.2 ஜென் 1 போர்ட், இரண்டு யுஎஸ்பி டைப்-சி 3.2 ஜென் போர்ட், 3.5MM ஆடியோ ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி புக் ஏர் மாடல்.மேலும் இந்த ரியல்மி புக் ஏர் மாடலின் விலை Yuan 2,999 (இந்திய மதிப்பில் ரூ.35,400) ஆக உள்ளது.

வரும் ஜூலை 19-ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது ரியல்மி புக் ஏர் லேப்டாப். மேலும் புதிய ரியல்மி லேப்டாப் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Panasonic Toughbook 40 laptop Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X