Home
Computer

பானாசோனிக் டஃப்புக் புதிய அறிமுகம்!

By Super

பானாசோனிக் டஃப்புக் புதிய அறிமுகம்!
பானாசோனிக் நிறுவனம் புதிதாக சிஎஃப்-சி-2 என்ற பெயரில் டஃப்புக் எலக்ட்ரானிக் சாதனத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த எலக்ட்ரானிக் சாதனம் வருகிற ஜனவரி மாதம் மார்கெட்டில் விற்பனை செய்யப்படும் என்று கருதப்படுகிறது. இந்த டஃப்புக் பார்ப்பதற்கு டேப்லட் வடிவத்தில் இருப்பினும், பெரிய திரை வசதியினை கொண்டதாக தெரிகிறது.

இந்த டஃப்புக் 12.5 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திரையில் சிறப்பாக 5 விரல்களை கொண்டும் தொடுதிரையை பயன்படுத்தலாம். இதன் மல்டி டச் திரை, தொட்டவுடன் தகவல்களை விரைவாக வழங்கும் என்று கருதப்படுகிறது.

இந்த சிஎஃப்-சி-2 டஃப்புக் இன்டெல் கோர் ஐ-5 விப்ரோ பிராசஸரினையும் கொண்டிருக்கும். இதன் பிராசஸர் 2.8 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். இதில் 4ஜிபி ரேம் வசதியை அளிக்கும். இதில் 8 ஜிபி வரை ரேம் வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். இந்த டஃப்புக்கில் வின்டோஸ்-8 ப்ரீ-லோட் செய்யப்பட்டுள்ளது.

இதில் 9-செல் , 6-செல் மற்றும் 3-செல் பேட்டரிகளை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இதில் 9-செல் பேட்டரி 15 மணி நேரத்தினையும், 3-செல் பேட்டரி 5 மணி நேரத்தினையும், 6-செல் பேட்டரி 11 மணி நேரம்

பேட்டரியினையும் வழங்கும்.

அதோடு இதில் என்எப்சி தொழில் நுட்ப வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தகவல்கள் கூறுகின்றது. ஆனால் இந்த டஃப்புக்கின் விலை கொஞ்சம் அதிகப்படியாக இருக்கும் போல் தெரிகிறது.

இந்த டஃப்புக் கிட்டத்தட்ட 1 லட்சம் விலை கொண்டதாக இருக்கும் என்று வலைத்தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த அளவு இதன் சிறப்பு

என்ன என்பதையும் பொருத்திருந்து பார்க்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X