Home
Computer

புதிதாக 3 லேப்டாப்புகளை அறிமுகப்படுத்துகிறது பானாசோனிக்

By Super
புதிதாக 3 லேப்டாப்புகளை அறிமுகப்படுத்துகிறது பானாசோனிக்
பெனோசோனிக் நிறுவனம் வணிகத்தில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக 3 டப்புக்குகளை களமிறக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இந்த புதிய லேப்டாப்புகள் டப்புக்குகள் களத்தில் சிறந்த வரவேற்பைப் பெறும் என நம்பலாம். குறிப்பாக வியாபாரத்திற்கு பயன்படும் டப்புக்குகளுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகமாக இருக்கும்.

வியாபாரத்தை சிறப்பாக நடத்த புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகள் தேவையான ஒன்றாக இருக்கின்றன. லேப்டாப்புகளில் பொதுவாக ஹார்ட் டிஸ்க்கும் கீபோர்டும் வெகுவாக பாதிக்கப்படும். ஆனால் இவற்றைக் காக்கும் புதிய நோக்குடன் பெனோசோனிக் நிறுவனம் புதிய லேப்டாப்புகளை களமிறக்க இருக்கிறது அவற்றைப் பற்றி கீழே பார்ப்போம்.

பெனோசோனிக் டஃப் புக் சிஎப்-53:

இந்த புதிய லேப்டாப்பிலுள்ள கீபோர்டை தண்ணீர் எளிதாக தாக்காது. ஏனெனில் இதன் கீபோர்ட் 170 மிமீ கண்ணாடி மூடியால் மூடி வைக்கப் பட்டுள்ளதால் இதை ஈரப்பதம் எளிதில் தாக்காது. மேலும் இந்த லேப்டாப் 75 செமீ உயரத்தில் இருந்து விழுந்தாலும் இதன் ஹார்ட் டிஸ்க் பாதிப்பு அடைவதில்லை.

மேலும் இது 100கிகி/எப் ப்ரஷரையும் தாங்கும் சக்தி கொண்டது. அதாவது இதன் டிஸ்ப்ளே எந்த ஒரு ஷாக்கோ அல்லது வைப்ரேஷனோ தாக்கினாலும் எளிதில் பாதிப்பு அடையாது. ஏனெனில் இதில் 4 ஷாக் அபாசார்பிங் பேடுகளைக் கொண்டு இருக்கிறது. இதன் விலை ரூ.71,955க்குள் இருக்கும் என நம்பலாம்.

பானாசோனிக் டஃப் புக் எஸ்-10:

புதிய பெனோசோனிக் டப்புக் எஸ்10 இதற்கு முந்தைய எஸ்9ஐ விட எடை குறைந்த ஒன்றாகும். இதன் எடை 1.3கிகி மட்டுமே. இதன் டிஸ்ப்ளே 12.1 இன்ச் கொண்டு 1280X800 ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. இதனால் அதிகமான வெளிச்சத்தில் நாம் இதில் வேலை செய்தாலும் இது மிகத் துல்லியாமாகத் தெரியும். மேலும் இதுவும் கீழே விழுந்தாலும் எளிதாக உடையாது. அதுபோல் 100கிகி ப்ரஷரைத் தாங்கும் வலிமை கொண்டது. மேலும் இது 12.5 மணி நேரம் தாங்கும் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ரூ. 110250க்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டப்புக் சிஎப்-சி1 மார்க்2:

இது ஒரு கன்வெர்ட்டிபுள் லேப்டாப்பாகும். அதாவது இது பெனோசானிக்கின் சிஎப்-சி1க்கு பதிலாக வரும் லேப்டாப்பாகும். இந்த லேப்டாப் 12 மணி நேரம் தாங்கும் பேட்டரியையும், 320ஜிபி ஹார்ட் டிஸ்க் ட்ரைவையும் கொண்டுள்ளது. மேலும் 2ஜிபி வரை விரிவாக்கும் அளவிற்கு மெமரி வசதியையும் வழங்குகிறது. இந்த லேப்டாப்பும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பதற்கான வசதியைக் கொண்டிருக்கிறது.

மேலும் இதன் எடை 1.47கிகி ஆகும். இது 100கிகி அழுத்தத்தைத் தாங்கக்கூடியது. மேலும் இது விண்டோல் 7 ஓஎஸ் கொண்டிருக்கிறது. மேலும் இது இண்டல் கோர் ஐ5-2520எம் விப்ரோ ப்ராசஸர் கொண்டுள்ளது. மேலும் வைபை 802.11எ/பி/ஜி/என் மற்றும் வி2.1 ப்ளூடூத் மற்றும் இடிஆர் வசதியும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.125000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X