சோனி vs பானசோனிக்: லேப்டாப் யுத்தம்!

By Karthikeyan
|
சோனி vs பானசோனிக்: லேப்டாப் யுத்தம்!

ஜப்பானிய கெட்ஜெட் சந்தையில் சோனியும் பனசோனிக்கும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன. அதாவது 2 நாள்களுக்கு முன்பு சோனி தனது க்ஸ்பேரியா மாடல் லேப்டாப்புகளை ஜப்பானில் களமிறக்கிறது. ஆனால் இப்போது அதற்கு போட்டியாக பனசோனிக் நிறுவனம் தனது நோட் பி11 வரிசை லேப்டாப்புகளை ஜப்பான் சந்தையில் களமிறக்குகிறது. இந்த லேப்டாப் பல நவீன தொழில் நுட்பங்களுடன் வருகிறது.

குறிப்பாக இதில் இருக்கும் இன்டல் கோர் ஐ7-3615க்யுஎம் சிப் இந்த லேப்டாப்பிற்கு உறுதியையும் அதே நேரத்தில் தாறுமாறான வேகத்தையும் வழங்குகிறது. மேலும் 16ஜிபி ரேமுடன் இந்த லேப்டாப் வருவதால் இதில் ஏராளமான தகவல்களை சேமித்து வைக்க முடியும். அதுபோல் இந்த லேப்டாப் 750 ஜிபி ஹார்ட் ட்ரைவ் மற்றும் 256ஜிபி எஸ்எஸ்டி கொண்டிருப்பதால் இதன் சேமிப்பை விரிவுபடுத்த முடியும்.

ஆனால் இதில் எச்டிடி அமைக்கப்பட்டுள்ளதால் இதில் 8ஜிபி மெமரியை மட்டுமே பெறமுடியும். இந்த லேப்டாப் அகலமான திரையுடன் அதாவது 1920 x 1080 பிக்சல் ரிசலூசன் கொண்ட 15.6 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வருகிறது.

இந்த லேப்டாப் இந்த மே 18ல் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் ரூ.1,50,000க்கு விற்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இந்த லேப்டாப் ஜப்பான லேப்டாப் சந்தையை கதிகலங்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X