Home
Computer

பேக்கார்டு பெல் வழங்கும் புதிய ஸ்லிம் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்

By Super

பேக்கார்டு பெல் வழங்கும் புதிய ஸ்லிம் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்
ஆல் இன் ஒன் ஸ்லிம் வடிவமைப்பு கொண்ட மேசை கணினிகள் இப்போது மார்க்கெட்டில் அடுத்தடுத்து அறிமுகமாகி வருகின்றன. அலுவலகங்களில் இத்தகைய கணினிகளை எளிதாக பயன்படுத்தலாம் என்பதால் வரவேற்பு கூடிக்கொண்டே செல்கிறது.

இந்த வரிசையில் புதிய ஸ்லிம் வடிவமைப்பு கொண்ட புதிய டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை பேக்கார்டு பெல் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

ஒன் டூ எஐஒ (ஆல் இன் ஒன்) என்ற பெயரில் இந்த மேசை கணினி வருகிறது.

இதன் பழைய மாடல்களை ஒப்பிடும் போது இது மிகவும் மெல்லியதாக இருக்கிறது. மிகவும் மெல்லியதாக இருப்பதால் இதில் உள்ள வசதிகள் குறைவாக இல்லை. மாறாக அதிகமாக இருக்கிறது. இந்த கணினியை நமது வசதிக்கு ஏற்றார்போல் மேசையிலோ அல்லது சுவரிலோ பொருத்திக் கொள்ளலாம்.

இந்த கணினி கருப்பு நிறத்தில் நமது மனதைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் இருக்கிறது. இதில் உள்ள பட்டன்களும் மிக அழகாக வரிசையாக உள்ளன. இதன் கீழ்பாகம் க்ரே நிறத்தில் வருகிறது. அந்த கீழ்பகுதியில் பட்டன்கள் உள்ளன. அதனால் இந்த பட்டன்களை இயக்குவது மிக எளிதாக இருக்கும்.

பேக்கார்ட் பெல் மேசை கணினி 2 அளவுகள் கொண்ட திரைகளுடன் வருகிறது. குறிப்பாக ஒன்று 21 இன்ச் அளவிலும் மற்றொன்று 23 இன்ச் அளவிலும் வருகிறது. இந்த இரண்டு திரைகளுமே 1920x 1080 பிக்சல் ரிசலூசனைக் கொண்டுள்ளன. இதன் ரேசியோ 16:9 ஆகும்.

இதில் படம் பார்ப்பதற்கும் மற்றும் வீடியோ கேம் விளையாடுவதற்கும் மிக அருமையாக இருக்கும். மற்ற மேசை கணினிகளோடு ஒப்பிடும் போது இந்த கணினியின் திரை மிக அழகாக படங்களைக் காண்பிக்கும்.

இன்டெலின் சேன்டி பிரிட்ஜ் தளத்தையும் கொண்டுள்ளது. நமது வசதிக்கு ஏற்றார்போல் இன்டலின் ஐ3, ஐ5 மற்றும் ஐ7 ப்ராசஸர்களை இந்த கணினியில் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக வீடியோ எடிட்டிங் மற்றும் க்ராபிக்ஸ் டிசைனிங் செய்யும் வேலை இருந்தால் நாம் ஐ7 ப்ராசஸரைப் பயன்படுத்தலாம்.

ஆனால் இந்த பேக்கார்ட் பெல்லின் கணினியை வீட்டில் பயன்படுத்த விரும்பினால் நாம் ஐ3 ப்ராசஸரே போதுமானது. இந்த ப்ராசஸர் 8 ஜிபி ரேமை சப்போர்ட் செய்யும். மேலும் இதில் 2 வகையான க்ராபிக்ஸ் கார்டுகளையும் நாம் பயன்படுத்த முடியும். அதாவது என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி2530 அல்லது ஜிடி 520 கார்ட் அல்லது எஎம்டி ரேடியோன் எச்டி 645 க்ராபிக் இவற்றை பயன்படுத்தலாம்.

இந்த மேசை கணினி டிஎச்எக்ஸ் ட்ரு ஸ்டூடியோ பிசி சவுண்ட் கார்ட் கொண்டள்ளது. அதனால் இந்த கணினி 5.1 சரவுண்ட் சவுண்ட் வசதியை வழங்கும். மேலும் 2.5வாட்ஸ் ஸ்பிக்கர்களும் இதில் இன்பில்ட்டாக உள்ளதால் நாம் தனியாக ஸ்பீக்கர்கள் வாங்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.

இணைப்பிற்காக ஏராளமான வசதிகள் உள்ளன. அதாவது மொத்தமாக 6 யுஎஸ்பி போர்ட்டுகள் இதில் உள்ளன. அவற்றில் 2 யுஎஸ்பி 3.0 போர்ட்டுகளும் 4 யுஎஸ்பி 2.0 போர்ட்டுகளும் அடங்கும். மேலும் இதில் 5 இன் 1 கார்டு உள்ளதால் இதன் மூலம் தகவல் பரிமாற்றத்தை மிக விரைவாகச் செய்யலாம்.

எல்லா வகையான மெமரி கார்டுகளையும் இது சப்போர்ட் செய்யும். மேலும் இது எச்டிஎம்ஐ போர்ட்டும் கொண்டுள்ளது. மேலும் ஆடியோ ஜாக்கும் உள்ளதால் மற்ற ஸ்பீக்கர்களையும் இதில் இணைக்க முடியும்.

விலையைப் பார்த்தால் பேக்கார்ட் பெல் ஒன்டூ எஐஒ (ஆல் இன் ஒன்) மேசை கணினி 23 இன்ச் கொண்ட கணினி ரூ.60000க்கும், 21 இன்ச் திரை கொண்ட கணினி ரூ.45000க்கும் வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X