Home
Computer

760 கிராம் எடையுடன் வரும் புதிய டேப்லெட்

By Super
760 கிராம் எடையுடன் வரும் புதிய டேப்லெட்
மெல்லிய மற்றும் ஸ்லீக் டேப்லட்டுகளுக்கு இப்போது வரவேற்பு அதிகம். ஆனால் பேக்கார்ட் பெல் லிபர்டி டேப் ஜி100 சற்று வித்தியாசமாக வருகிறது.

ஐஎப்எ 2011ல் பேக்கார்ட் பெல் லிபர்டி டேப் ஜி100 அறிமுகப்படுத்தப்பட்டது. இது முதல் பார்வையிலேயே தடியாகவும் அதிக எடையுடனும் காணப்படுகிறது. இது 760 கிராம் எடை கொண்டதாக வருகிறது. சாம்சங் காலக்ஸி டேப் 10.1( 545 கிராம் )மற்றும் ஆப்பிள் ஐபேட்-2(613கிராம்) எடையை விட அதிகம் ஆகும்.

பேக்கார்ட் பெல் லிபர்டி டேப் ஜி100-ன் அதிக எடை மற்றும் இதன் அதிக தடிமன் இதை எடுத்துச் செல்வதற்கு சற்று வசதிக் குறைபாடாக இருக்கும். மேலும் இது தற்போதைய ட்ரெண்டுக்கு மாறாகவும் இருக்கும். ஆனால் இதன் செயல் திறனை நாம் குறை சொல்லவே முடியாது.

இந்த பேக்கார்ட் பெல் லிபர்டி டேப் ஜி100 க்ளாசி சிவப்பு ஒயின், ராயல் கருப்பு, டயனமிக் வெள்ளை அகிய நிறங்களில் வருகிறது. மேலும் இது எச்டிஎம்ஐ, மினி யுஎஸ்பி, மைக்ரோ எஸ்டி மற்றும் ஹெட்போன் ஜாக் போன்ற அனைத்து வசதிகளையும் வழங்குகிறது.

இதன் 10.1 எல்சிடி எச்டி தொடுதிரை 1280X800 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு ஹணிகோம்ப் 3.0 ஓஎஸ் கொண்டுள்ளது. சிறந்த செயல் திறனுக்காக தேக்ரா 2 டூவல் கோர் ப்ராசஸரைக் கொண்டுள்ளது.

பேக்கார்ட் பெல் லிபர்டி டேப் ஜி100ல் எச்டி வீடியோ மற்றும் எச்டி கேமிம் மிக அம்சமாக இருக்கும். இதன் எல்சிடி திரை 10 சென்சார்களைக் கொண்டுள்ளதால் தெளிவாகும் துல்லியமாகவும் இருக்கும். இதில் வெப் ப்ரவுசிங்கும் சிறப்பாக இருக்கும். மேலும் இது டோல்பை மொபைல் ஒலி கொண்டிருப்பதால் இதில் இசையைக் கேட்டால் மிக உற்சாகமாக இருக்கும்.

பேக்கார்ட் பெல் லிபர்டி டேப் ஜி100 5 மெகா பிக்ஸல் ரியர் கேமராவும் 2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் கொண்டுள்ளது. அதனால் வீடியோ கான்பரன்சிங் மற்றும் வீடியோ காலிங் செய்வது இதில் மிக எளிதாக இருக்கும். அதுபோல் கூகள் டாக்கும் ஏற்கனவே இதில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

இதன் ரியர் கேமரா ஆட்டோ போக்கஸை சப்போர்ட் செய்து எல்இடி ப்ளைஷையும் வழங்குகிறது. அதனால் 720பி எச்டி வீடியோவை நாம் இதில் பெற முடியும். மேலும் இதில் டூயுடியூப் பார்மட்டிலும் படம் பிடிக்க முடியும்.

பேக்கார்ட் பெல் லிபர்டி டேப் ஜி100ன் பேட்டரி 6520 எம்எஎச் லை-பாலிமர் திறனைக் கொண்டது. அதனால் 10 மணி நேரம் தொடர்ந்து இதில் வேலை செய்ய முடியும். இந்தியாவில் பேக்கார்ட் பெல் லிபர்டி டேப் ஜி100ன் விலை ரூ.27,000மாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X