செயல் திறனில் புயலாக மிரட்டும் புதிய ஆரிஜின் லேப்டாப்!

மற்ற லேப்டாப்புகள் போட்டி போட முடியாத அளவிற்கு இஒஎன்17-எக்ஸ் லேப்டாப் அதிரடியான வேகத்தைக் கொண்டிருக்கிறது. இதில் உள்ள சக்தி வாய்ந்த ஐ7 டெஸ்க்டாப் ப்ராசஸர்கள் மற்றும் 32ஜிபி டிடிஆர்3 மெமரி போன்றவை இந்த லேப்டாப்பிற்கு சூப்பர் வேகத்தைத் தருகின்றன.
ஆரிஜின் இஒஎன்17-எக்ஸ் லேப்டாப் எஸ்எல்ஐல் 2 ஜிஇபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 580எம் விடியோ கார்டுகள் மற்றும் எச்டி ஆடியோவிற்கான மல்டி ப்ளூரே பர்னல் கோம்போ ட்ரைவ் போன்றவற்றைக் கொண்டுள்ளது.
இந்த இஒஎன் லேப்டாப்பின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 17.3 இன்ச் அளவில் ஒரு முழுமையான் எச்டி அகலத் திரையைக் கொண்டுள்ளது. இந்த திரையின் பி்க்சல் ரிசலூசன் 1920 x 1080 ஆகும். கேமராவைப் பொருத்தவரை இந்த லேப்டாப் பில்ட்இன் மைக்குடன் கூடிய வெப்காமைக் கொண்டுள்ளது.
இந்த லேப்டாப்பின் சேமிப்பு வசதி மிக அதிகமாக இருக்கிறது. அதாவது இந்த இஒஎன் லேப்டாப் 32ஜிபி அளவு கொண்ட க்வாட் சேனல் டிடிஆர்3 மெமரியைக் கொண்டுள்ளது. அதுபோல் ஒரு 9 இன் 1 மீடியா ரீடரும் இந்த லேப்டாப்பில் உண்டு.
தகவல்களை மேலாண்மை செய்வதற்காக இந்த லேப்டாப் வைபை 802.11 பி/ஜி/என், எச்டிஎம்ஐ அவுட், ப்ளூடூத், யுஎஸ்பி 3.0 போர்ட்டுகள் மற்றும் இசட்டா போர்ட் போன்ற இணைப்பு வசதிகளை வழங்குகிறது.
அடுத்ததாக இந்த லேப்பின் மின் திறன் வசதியைப் பார்த்தால் இது 6 செல் கொண்ட பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இதன் இயங்கு தளம் விண்டோஸ் 7 ஆகும். அதுபோல் இந்த லேப்டாப் இன்ட்ல் கோர் ஐ7-3960எக்ஸ் டெக்ஸ்டாப் ப்ராசஸர்களைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications