Home
Computer

ஆவலைத் தூண்டும் அம்சங்களுடன் புதிய டேப்லெட்!

By Karthikeyan
ஆவலைத் தூண்டும் அம்சங்களுடன் புதிய டேப்லெட்!

டேப்லெட் சந்தையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பிரபலமான நிறுவனங்கள் தங்களின் உயர் தரமான டேப்லெட்டுகளை களமிறக்கும் வேளையில் பல புதிய நிறுவனங்களும் இந்த டேப்லெட் சந்தையில் புதிதாக களமிறங்குகின்றன. அந்த வகையில் இப்போது 7 இன்ச் கொண்ட ஆரஞ்ச் டாஹிட்டி என்று புதிய டேப்லெட் களமிறங்குகிறது.

இந்த டாஹிட்டி டேப்லெட்டின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் இதன் டிஸ்ப்ளே 7 இன்ச் அளவு கொண்டு மல்டி டச் வசதியுடன் வருகிறது. இதன் மொத்த பரப்பு 190 x 124 x 10.5 ஆகும். அதுபோல் இதன் மொத்த எடை 390 கிராம் மட்டுமே. மேலும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 3.2.1 இயங்குதளத்தில் இயங்குகிறது. மேலும் இது 5 மெகா பிக்சல் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. அதுபோல் அடுத்த சிறப்பு இதன் 4000 எம்ஹெர்ட்ஸ் மின் திறன் கொண்ட பேட்டரி ஆகும்.

மேலே சொல்லப்பட்ட வசிதகளுடன் இந்த டாஹிட்டி டேப்லெட்டின் டிசைனும் சூப்பராக உள்ளது. இதன் ப்ராசஸர் க்யூவல்காம் ஸ்நாப்ட்ராகன் எம்எஸ்எம்8260 ஆகும். இந்த ப்ராசஸர் 1200 மெகா ஹெர்ட்ஸ் சக்தியைக் கொண்டிருக்கிறது.

இந்த டாஹிட்டி டேப்லெட்டின் 7 இன்ச் டிஸ்ப்ளேயின் பிக்சல் ரிசலூசன் 1024 x 600 ஆகும். அதுபோல் இதன் கேமராவும் மிகத் துல்லியமான தெளிவான படங்களை எடுக்கும் சக்தி வாய்ந்தது. மேலும் இந்த கேமரா ஆட்டோ போக்கஸ் மற்றும் 1 எக்ஸ் ஆப்டிக்கல் சூம் போன்றவற்றையும் கொண்டுள்ளது. அதோடு இதன் 0.9 மெகா பிக்சல் துணை கேமரா இந்த டேப்லெட்டுக்கு பலம் சேர்க்கிறது.

இந்த டாஹிட்டி டேப்லெட் விரிவுபடுத்தும் ஸ்லாட்டுகளான மைக்ரோ எஸ்டி மற்றும் ட்ரான்ஸ் ப்ளாஷ் போன்ற வசதிகளையும் வழங்குகின்றன. மேலும் யுஎஸ்பி போர்ட் மற்றும் ப்ளூடூத் வசதியும் இந்த டேப்லெட்டில் உண்டு. அதாவது இதன் ப்ளூடூத் 2.1 + இடிஆர் வேகமான தகவல் பரிமாற்றத்திற்கு ஏதுவாக இருக்கும். மேலும் இந்த டேப்லெட்டில் வைபை இணைப்பும் உள்ளது.

ஆரஞ்ச் டேப்லெட்டின் பேட்டரியின் மின்திறன் 4000 எம்ஹெர்ட்ஸ் ஆகும். அதனால் இந்த டேப்லெட்டை நீண்ட நேரம் இயக்க முடியும். இந்த டேப்லெட்டின் மற்ற அம்சங்களைப் பற்றி இன்னும் வெளியிடவில்லை. அதுபோல் இந்த டேப்லெட் எப்போது விற்பனைக்கு வரும் என்பதையும் அதன் நிறுவனம் அறிவிக்கவி்ல்லை. இதன் விலை குறைவாக இருக்கும் என்று வதந்தி நிலவுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X