ஒலிம்பிக்கை வரவேற்கும் ஏசரின் 2 புதிய டேப்லெட்டுகள் ரெடி!

By Karthikeyan
|
ஒலிம்பிக்கை வரவேற்கும் ஏசரின் 2 புதிய டேப்லெட்டுகள் ரெடி!

ஒலிம்பிக் தொடங்குவதற்கு ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த நேரத்தில் ஏசர் நிறுவனம் ஒலிம்பிக் முத்திரை தாங்கிய ஐகோனியா டேப் எ510 மற்றும் எ700 ஆகிய டேப்லெட்டுகளை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த இரண்டு டேப்லெட்டுகளும் ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் ஆகும்.

இந்த டேப்லெட்டுகளில் ஏசரின் முத்திரைக்கு அருகில் ஒலிம்பிக் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். அதுபோல் ஒலிம்பிக் வளையங்களும் இந்த டேப்லெட்டுகளின் பின்புறத்தில் இருக்கும்.

எ510 டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இந்த டேப்லெட் 1280 X 800 பிக்சல் ரிசலூசன் கொண்ட 10.1 இன்ச் திரையைக் கொண்டிருக்கிறது. இதன் ப்ராசஸர் 1.3 ஜிஹெர்ட்ஸ் டேக்ரா 3 ஆகும். இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்குதளத்தில் இயங்குகிறது. இதன் பேட்டரி 15 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இந்த டேப்லெட்டில் எச்டி வீடியோ ப்ளேபேக்கும் உண்டு.

ஐகோனியா எ700 டேப்லெட்டை எடுத்துக் கொண்டால் இந்த டேப்லெட்டும் 1.3 ஜிஹெர்ட் டேக்ரா 3 ப்ராசஸர் மற்றும் ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது. இதன் திரையின் ரிசலூசன் 1920 X 1200 ஆகும். அதாவது எ510ஐவிட அதிக ரிசலூசனைக் கொண்டிருக்கிறது.

இநத 2 டேப்லெட்டுகளும் ஏசரின் அருமையன சாப்ட்வேர்களைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இதில் இருக்கும் ஏசர் பிரிண்ட் சாப்ட்வேர் மூலம் வயர் இல்லாமல் ஏடுகள் மற்றும் படங்களை பிரிண்ட் செய்ய முடியும். மேலும் இந்த டேப்லெட்டுகளில் போலாரிஸ் ஆபிஸ் என்ற சாப்ட்வேரும் உள்ளது. இந்த சாப்ட்வேர் மைக்ரோசாப் ஆபிசுக்கு இணையாக இருக்கும். இந்த சாப்ட்வேர் மைக்ரோசாப்ட் ஆபிஸ் பைல்களை திறக்கவும் அதே நேரத்தில் எடிட் செய்யவும் உதவும்.

இந்த டேப்லெட்டுகள் மிக அருமையான மீடியா அனுபவத்தை வழங்குகின்றன. அதற்காக இந்த டேப்லெட்டுகள் டோல்பி மொபைல் 3+ சாப்ட்வேரைக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் மற்ற ஸ்பீக்கர்களோடு இந்த டேப்லெட்டுகளை இணைத்து மிக பக்காவான அதிரடி ஒலி அமைப்பை பெறமுடியும்.

இந்த டேப்லெட்டுகளைப் பற்றிய மற்ற அம்சங்கள் இன்னும் வெளிவரவில்லை. குறிப்பாக இந்த டேப்லெட்டுகள் லண்டனில் நடைபெற இருக்கும் உலக மகா ஒலிம்பிக் நிகழ்வை ஞாபகப்படுத்தும். இந்த டேப்லெட்டுகள் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் வருகின்றன. இவற்றின் விலை மற்றும் சந்தைக்கு வரும் நாள் ஆகியவை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X