விரைவில் மார்க்கெட்டிற்கு வருகிறது ஆலிவ்பேட்-2

By Super
|
விரைவில் மார்க்கெட்டிற்கு வருகிறது ஆலிவ்பேட்-2
உலக அளவில் டச்பேடுகளின் தேவை அதிகரிப்பதால் எல்லா உற்பத்தியாளர்களும் தங்களுடைய டச்பேடுகளை அறிமுகப்படுத்துவதில் மிகத் தீவிரமாக இருக்கின்றனர். மேலும் இந்த டச்பேடுகளை ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கின்றனர். அந்த வரிசையில் பார்த்தால் புதிதாக வரும் ஆலிவ்பேட் 2 ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் வந்திருக்கிறது. அதேபோல் இதன் ப்ராசஸரும் அதிவேகத்தில் இயங்கக்கூடிய தொழில் நுட்பத்தில் வருகிறது.

ஆலிவ்பேட்2 இரண்டு அதிக திறன் கொண்ட ப்ராசஸர்களைக் கொண்டிருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு 2.3 ஓஎஸைக் கொண்டிருக்கிறது. இதன் டிஸைனும் மிக ஸ்டைலாக இருக்கிறது. மேலும் இது எடை குறைந்த ஒன்றாகும். இதன் ஆண்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்ப்ரீட் ஓஎஸ் 1ஜிஹச்ஸட் ப்ராசஸராக் கொண்டுள்ளது. மேலும் இதன் டிவைஸ் 512எம்பி ஆகும்.

ஆலிவ்பேட் 2ல் தொடர்பு மற்றும் நெட்வோர்க வசிதிகள் ஏராளமாக உள்ளன. அதாவது தொடர்புக்காக வைபை 802.11 பி/ஜி/என் மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதியும் உள்ளது. மேலும் ஹச்எஸ்டிபிஎ வசதியும் இதில் உண்டு. பழைய ஆலிவ்பேடில் 3ஜி தொடர்புக்காக தனியாக டாங்கில் தொடர்பு இருந்தது. ஆனால் புதிய ஆலிவ்பேடில் அது இன்பில்ட்டாகவே உள்ளது.

ஆலிவ் டெலிகாம் நிறுவனத்தின் சேர்மன திரு.அருண் கண்ணா கூறுகையில் தமது நிறுவனம் நெட்வோர்க்கை வலுப்படுத்துவதற்காக ஸ்மார்ட்போன்களையும் டாப்லட்டுகளையும் அதிக அளவில் களமிறக்குவதாக கூறியிருக்கிறார். மேலும் ஆலிவின் தயாரிப்புகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வாடிக்கையாளர்களிடமிருந்து வந்திருக்கும் புகார்கள் விரைவில் நிறைவு செய்யப்படும் எனறும் கூறியிருக்கிறார்.

மேலும் அவர்களுடைய அடுத்த டாப்லட் கண்டிப்பாக ஆண்ட்ராய்டு ஓஎஸ் போனாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த புதிய போன் ரியர் மற்றும் முகப்பு கேமரா உட்பட 2 கேமராக்களைக் கொண்டிருக்கும். இதன் 7 இன்ச் கப்பாசிட்டிவ் தொடுதிரை சிறந்த ரிசலூசனைக் கொண்டிருக்கும். மேலும் மெமரி சேமிப்பை விரிவுபடுத்துவதற்காக எக்ஸ்டர்னல் மைக்ரோஎஸ்டி கார்ட் ஸ்லாட் வசதியும் உள்ளது. இதை இந்தியாவில் ரூ.20,000க்கு வாங்கலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X