ஆலிவ்பேட் டேப் மற்றும் ரிலையன்ஸ் 3ஜி டேப் - ஒரு ஒப்பீடு

Posted By: Staff

ஆலிவ்பேட் டேப் மற்றும் ரிலையன்ஸ் 3ஜி டேப் - ஒரு ஒப்பீடு
இந்தியாவில் டேப்லட் உற்பத்தியாளர்களிடையே போட்டி அதிகம். இந்த சூழலில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் புதிய 3ஜி டேப்லட்டை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதுவே இந்தியாவிலிருந்து வெளிவரக்கூடிய முதல் ஆன்ட்ராய்டு டேப்லெட்டாக இருக்கும் என்று சொல்லலாம். அதே நேரத்தில் ஆலிவ் டெலிகாம் நிறுவனம் ஆலிவ்பேட் விடி-100 என்ற புதிய டேப்லட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் போட்டியை அதிகப்படுத்தவிருக்கிறது.

ஆலிவ்பேட் விடி-100ன் ஒரு முக்கிய அம்சம் இதில் போன்று அழைப்புகளை செய்து பேச முடியும். அதே நேரத்தில் ரிலையன்சும் விரைவில் மலிவு விலையில் தனது 3ஜி டேப்பை அறிமுகப்படுத்தவிருக்கிறது. 3ஜி டேப் இசட்இ என்ற சீன நிறுவனத்தால் தயாரித்து வழங்குகிறது. இது 7 இன்ச் அளவில் கப்பாசிட்டிவ் தொடுதிரை டிஸ்பிளேயுடன் 521எம்பி ரேமை கொண்டுள்ளது. மேலும் ரியர் மற்றும் முகப்பு 2எம்பி கேமராக்களையும், 32ஜிபி சேமிப்பு வசதியுடன்கூடிய ஆண்ட்ராய்டு ஜிஞ்சர்ப்ரீடு ஓஎஸ்ஸையும் பெற்றிருக்கிறது.

ஆலிவ்பேட் விடி100யும் 7 இன்ச் அளவிலான கெப்பாஸிட்டிவ் தொடுதிரையுடன் 512 எம்பி இன்டர்னல் சேமிப்பையும் பெற்றிருக்கிறது. மேலும் இதனுடைய 4X அளவு சூம் செய்யக்கூடிய 3எம்பி கேமரா இந்த டேப்லட்டுக்கு மேலும் சிறப்பை அளிக்கிறது. இது ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸை கொண்டுள்ளது.

தொடர்பு வசதியைப் பொறுத்தவரை ரிலையன்ஸ் மிகச் சிறந்த வசதிகளை வழங்குகிறது. அதாவது ரிலையன்ஸ் வாய்ஸ் காலிங்குடன் கூடிய மொபைல் டிவி அப்ளிகேஷனை வழங்குகிறது. ஜிபிஎஸ் அப்ளிகேஷனும் இதில் அடங்கியிருக்கிறது. மேலும் எஸ்எம்எஸ். எம்எம்எஸ், இமெயில், ப்ளாக்ஸ் மற்றும் சோஷியல் நெட்வோர்க்கிங் போன்ற ஏராளமான வசதிகளை வாரி இறைத்திருக்கிறது.

மறுபக்கம் ஆலிவ்பேட் விடி100ஐ எடுத்துக் கொண்டால் மேலே கூறிய அனைத்து வசதிகளுடன் பல சாப்ட்வேர்களையும் மற்றும் உலக கடிகராம், ஸ்டேப் வாட்ச், கம்பாஸ், ஜி சென்ஸார்ஸ் போன்ற ஆர்கனைஸர் அப்ளிகோஷன்களையும் வழங்குகிறது. மேலும் இது தரமான் 3.5 ஆடியோ ஜாக்கையும் 802.11 வைபை சப்போர்ட்டையும் வழங்கி வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. ரிலையன்ஸ் 3ஜி டேப் அலுவலகப் பணியாளர்களுக்கு பயன்படும் வகையில் மைக்ரோசாப்ட் எக்ஸல், வேர்ட், பவர்பாய்ன்ட் மற்றும் பிடிஎப் வசதிகளையும் வழங்குகிறது.

ரிலையன்ஸ் 3ஜி டேப்பை ரூ.12,999க்கும், ஆலிவ்பேட் விடி-100ஐ ரூ.19,990க்கும் இந்திய சந்தையில் நாம் வாங்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot