Home
Computer

இளைஞர்களைக் கவருமா புதிய லெனோவா டேப்லெட்?

By Karthikeyan
இளைஞர்களைக் கவருமா புதிய லெனோவா டேப்லெட்?

லெனோவா தனது புதிய லெனோவா ஐடியா டேப் எஸ்2109 என்ற டேப்லெட்டை சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டின் தொழில் நுட்பங்களையும் லெனோவா இப்போது வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக இதன் தொழில் நுட்பங்கள் இளையோரைக் கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்த டேப்லெட் 1024 x 768 பிக்சல் ரிசலூசனுடன் 9.7 இன்ச் அளவில் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேயைக் கொண்டிருப்பதால் இதைப் பார்ப்பதற்கு துல்லியமாக இருக்கும். அதே நேரத்தில் பளிச்சென்று இருக்கும். அதுபோல் 1.3 மெகா பிக்சல் முகப்புக் கேமராவுடன் வருவதால் வீடியோ உரையாடல் நடத்துவதற்கு மிக வசதியாக இருக்கும்.

இந்த புதிய லெனோவா டேப்லெட் 4 ஸ்பீக்கர்களைக் கொண்டு வருகிறது. அதனால் இதில் இசை கேட்பது மிகவும் ரம்மியமாக இருக்கும். இதில் மைக்ரோ எஸ்டி கார்டு இருப்பதால் இதன் மெமரியை விரிவு செய்ய முடியும்.

இந்த டேப்லெட்டை ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் அது 10 மணி நேர இயங்கு நேரத்தைக் கொடுக்கும். இதன் ப்ராசஸர் பற்றி இன்னும் தகவல் வரவில்லை.

இந்த டேப்லெட் மெல்லியாதாக இருப்பதால் மிக ஸ்டைலாக இருக்கிறது. அதனால் இளைஞர்களுக்கு கண்டிப்பாக இந்த டேப்லெட்டைப் பிடிக்கும். இந்த டேப்லெட் எப்போது விற்பனைக்கு வரும் என்று தெரியவில்லை. ஆனால் குறைந்த விலையில் வரும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X