புதிய ஆன்ட்ராய்டுக்கு மாறும் ஏசர் ஐகோனியா டேப்லெட்!

Posted By: Karthikeyan
புதிய ஆன்ட்ராய்டுக்கு மாறும் ஏசர் ஐகோனியா டேப்லெட்!

பல நிறுவனங்களைத் தொடர்ந்து ஏசர் நிறுவனமும் தனது ஏசர் ஐகோனியா டேப் எ500 டேப்லெட்டுக்கு ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீ்ம் சான்ட்விஜ் இயங்கு தளத்தை அப்டேட் செய்ய இருக்கிறது. குறிப்பாக கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஏசர் வாடிக்கையாளர்களுக்கு இப்போது இந்த அப்டேட் நடைபெற்று கொண்டிருக்கிறது. விரைவில் மற்ற நாடுகளில் இருக்கும் ஏசர் வாடிக்கையாளர்களுக்கும் இந்த அப்டேட் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சான்ட்விஜ் அப்டேட்டை ஏசர் வாடிக்கையாளர்கள் ஒடிஎ அப்டேட்டைப் போல பெற முடியும். மேலும் இதை எளிமையாகவும் அப்டேட் செய்ய முடியும். குறிப்பாக இந்த அப்டேட்டைப் பற்றிய தகவல் டேப்லெட்டில் வந்தவுடன் அதை க்ளிக் செய்து அப்டேட் செய்யலாம். அல்லது மெனுவுக்குள் சென்று அப்டேட் குறியை கிளிக் செய்து அப்டேட் செய்யலாம்.

அதற்குள் நிறைய பேர் இந்த அப்டேட்டை வெற்றிகரமாக செய்திருக்கின்றனர். அதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இந்த அப்டேட் மூலம் ஏசர் ஐகோனியா டேப் எ500 மேம்படுத்தப்பட்ட யூசர் இன்டர்பேஸ், துல்லியமான தகவல் தொடர்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட வெப் ப்ரவ்சிங் போன்ற வசதிகளைப் பெறும்.

மேம்படுத்தப்பட்ட யூசர் இன்டர்பேஸ் மூலம் இந்த டேப்லெட்டை இயக்குவது முன்பை விட மிகவும் எளிதாக இருக்கும். அதுபோல் வெப் ப்ரவ்சிங்கும் மிக வேகமாக இருக்கும். அதன் மூலம் இந்த ஏசர் ஐகோனியா டேப்லெட்டின் விற்பனையும் அதிகரிக்கும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot