ஐபேட் அப்ளிகேசனாக வந்திருக்கும் ஐன்ஸ்டீன் மூளை

By Karthikeyan
|
ஐபேட் அப்ளிகேசனாக வந்திருக்கும் ஐன்ஸ்டீன் மூளை

இயற்பியில் ஒரு பெரிய மாற்றத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தியது அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் மூளையாகும். தற்போது அந்த மூளை ஐபேட் அப்ளிகேசனாக மாறியிருக்கிறது. இந்த ஐன்ஸ்டீன் மூளை ஐபேட் அப்ளிகேசனை தற்போது 9.99 அமெரிக்க டாலர்களுக்கு பதிவிறக்கம் செய்ய முடியும்.

இந்த புதிய அப்ளிகேசன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அப்ளிகேசன் மூலம் அறிவியல் ஆய்வாளர்கள் ஐன்ஸ்டீன் அவர்களின் மூளையை மைக்ரோஸ்கோப் வழியாகப் பார்ப்பது போல் பார்க்க முடியும். அப்படிப்பட்ட ஒரு உணர்வை இந்த அப்ளிகேசன் கொடுக்கும்.

ஐன்ஸ்டீன் இறந்து பின் அவரது மூளையில் மறைந்திருக்கும் அதிசயங்களை எதிர்கால அறிவியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதற்காக தாம்ஸ் கார்வி என்பவர் ஐன்ஸ்டீனின் மூளையை தனியாக எடுத்து வைத்தார்.

தற்போது இந்த புதிய ஐன்ஸ்டீன் மூளை அப்ளிகேசன் ஐன்ஸ்டீனின் மூளையில் இருந்த ஏராளமான அற்புதங்களைக் கொடுக்கும் என்று நம்புவதாக சிக்காக்கோவில் உள்ள நேஷனல் மியூசியம் ஆப் ஹெல்த் அன்ட் மெடிசினின் முக்கிய ஆலோசோகர் ஸ்டீவ் லேண்டர்ஸ் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் பழைய தொழில் நுட்பத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த ஐன்ஸ்டீன் மூளையில் உள்ள பாகங்களை மிக எளிதாக கண்டறிய முடியுமா என்பது சற்று சிரமம்தான்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X