Home
Computer

ஆகாஷ்-2 டேப்லட்டின் விலை விவரம்!

By Super

ஆகாஷ்-2 டேப்லட்டின் விலை விவரம்!
அமெரிக்க நிறுவனமான டேட்டாவின் தயாரிப்பில் ஆகாஷ்-2 டேப்லட் இன்று வெளியிடப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இந்த ஆகாஷ்-2 டேப்லட்டினை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிடுகிறார். இதன் விலை விவரத்தின் தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

கவர்ச்சிகரமான விலையில் ஆகாஷ்-2 டேப்லட்...

சிறந்த தொழில் நுட்பங்களை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் குறைந்த விலையில் டேப்லட்கள் உருவாக்கப்பட இருந்தது. அதந் அடிப்படையில் ஆகாஷ்-2 டேப்லட்டின் விலை விவரங்கள் வெளியிடப்படாமலேயே இருந்தது. இந்த டேப்லட் ரூ. 2,263 விலை கொண்டதாக இருக்கும். ஆனால் ஆகாஷ்-2 டேப்லட் மாணவர்களுக்கு ரூ. 1,130 விலையில் வழங்கப்படும்.

எல்லா முதலமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் ஆகாஷ் 2...

விஷ்டெல், சென் மைக்ரோமேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் குறைந்த விலை கொண்ட டேப்லட்டினை மார்கெட்டில் வெளியிட்டு வருகிறது. இதனால் இந்த ஆகாஷ்-2 டேப்லட்டிற்கு பெரியளவில் போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது. இருப்பினும் அனைத்து மாணவர்களும் வாங்கும் வகையில் இந்த டேப்லட் குறைந்த விலையில் சிறப்பானதாக இருக்கும்.

அடுத்து ஆகாஷ்-2 ஒரு லட்சம் டேப்லட்கள் வெளியீடு...

பல மாதங்களுக்கு முன்பே இந்த டேப்லட் வெளியிடுவதாக இருந்தது. ஆனால் இதன் தொழில் நுட்ப ரீதியில் சில வசதிகளை சிறப்பான வகையில் வழங்க வேண்டி இருந்தது. அதனால் இந்த டேப்லட் பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் இப்போது வழங்கப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆகாஷ்-2 டேப்லட் ரூ. 1,130 விலையினை கொண்டதாக இருக்கம். மக்களுக்கு வழங்கப்படும் ஆகாஷ்-2வின் கமர்ஷியல் டேப்லட் யூபிஸ்லேட் 7-சி-ஐ விலை, மாணவர்களுக்கு வழங்கப்படும் வெர்ஷனைவிடவும் கொஞ்சம் அதிக விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X