விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் நோக்கியா டேப்லெட்!

Posted By: Karthikeyan
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் நோக்கியா டேப்லெட்!

நோக்கியா நிறுவனம் ஒரு புதிய 10 இன்ச் நோக்கியா விண்டோஸ் 8 என்ற டேப்லெட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த டேப்லெட் இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் விற்பனைக்கு வந்துவந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரவிருக்கும் புதிய நோக்கிய டேப்லெட்டின் முக்கிய சிறப்புகளாக பார்த்தால் இந்த டேப்லெட் க்வல்காம் ஸ்னாப்ட்ராகன் எஸ்4 சிப்செட் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. முதலில் 2 லட்சம் டேப்லெட்டுகள் தயாரிக்கப்படும். பின் அவற்றின் விற்பனைக்கு ஏற்ப அதன் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நோக்கிய புதிய டேப்லெட் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இயங்க இருக்கிறது. நோக்கியாவின் லுமியா ஸ்மார்ட்போனின் வெற்றியே இந்த நோக்கிய புதிய போனிற்கு வழிவகுத்திருக்கிறது.

மேலும் இந்த புதிய டேப்லெட் அகலமாகவும் அதே நேரத்தில் இது ஒரு யூசர் ப்ரண்டிலயாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த 2012ஆம் ஆண்டு டேப்லெட் உலகின் மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே ஆப்பிள் தனது புதிய ஐபேடை இந்த ஆண்டில் களமிறக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. அதுவும் மேம்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இந்த புதிய ஐபேட் வர இருக்கிறது. இந்த நேரத்தில் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் வரும் நோக்கியாவின் புதிய டேப்லெட் கடும் சவாலாக இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.

இந்த புதிய நோக்கியா டேப்லெட்டின் மற்ற அம்சங்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் இந்திய வாடிக்கையாளர்களின் ஏதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது என்பது உண்மை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்