நோக்கியா என்1 டேப்ளெட், அட இது பார்க்க ஐபேட் மினி மாதிரியே இருக்கே..!

By Meganathan

    ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் முறையாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் தனது புதிய ஆன்டிராய்டு டேப்ளெட்டான, நோக்கியா என்1 மாடலை வெளியிட்டது. இந்த டேப்ளெட் தோற்றத்தில் ஆப்பிளின் ஐபேட் மினி போன்று காட்சியளிக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

    ஆன்டிராய்டு லாலிபாப் நோக்கியா என்1 டேப்ளெட்  வெளியானது

    புதிய நோக்கியா என்1 டேப்ளெட் 7.9 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே 2048*1536 பிக்சல் மற்றும் எல்ஈடி பேக்லைட் கொண்டுள்ளது. டிஸ்ப்ளே முழுவதும் லேமினேட் செய்யப்பட்டு காற்று புதகாத அளவு வடிவமைக்கப்பட்டுள்ளதோடு கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

    2.3 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் இசட்3580 64 பிட் ஆட்டம் பிராசஸர் மற்றும் 2ஜிபி ராம் கொண்டுள்ளதோடு 32ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியும் உள்ளது. மேலும் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குவதோடு நோக்கியா இசட் லான்ச்சரும் இதில் உள்ளது.

    நோக்கியா என்1 டேப்ளெட் 8எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க ஆட்டோபோக்கஸ் கேமராவும் உள்ளது. இதில் 1080பி வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும். இந்த டேப்ளெட் 3.5 எம்எம் ஹெட்செட் ஜாக், மைக்ரோ-யுஎஸ்பி 2.0 டைப் சி, வைபை, ப்ளூடூத் 4.0 இருப்பதோடு 5300 எம்ஏஎஹ் பேட்டரியும் உள்ளது.

    English summary
    Nokia launches Nokia N1 Tablet that resembles iPad mini. here you will find the full specifications of Nokia N1 Tablet that resembles iPad mini.
    X

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more