Home
Computer

செப்டம்பர் 13ல் நிண்டின்டோவின் புதிய வீடியோ விளையாட்டு சாதனம்

By Karthikeyan
செப்டம்பர் 13ல் நிண்டின்டோவின் புதிய வீடியோ விளையாட்டு சாதனம்

அற்புதமான வீடியோ விளையாட்டு சாதனங்களைத் தயாரித்து வரும் நிண்டின்டோ நிறுவனம் விரைவில் தனது அடுத்த புதிய விளையாட்டுச் சாதனத்தை வெகு விரைவில் களமிறக்க இருக்கிறது. நிண்டின்டோ வி யு என்று அழைக்கப்படும் அந்த சாதனம் வரும் செப்டம்பர் 13 அன்று களம் இறங்க இருக்கிறது.

இந்த புதிய வி யு கேமிங் சாதனத்தின் விலை 350 அமெரிக்க டாலர்களாக இருக்கும். அதாவது இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.20,000 ஆகும். அதே நேரத்தில் இந்த விளையாட்டு சாதனம் குறைந்த விலையில் வருவதால் மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் சோனி ஆகியவை தங்களது விளையாட்டு சாதனங்களான எக்ஸ்பாக்ஸ் 360 மற்றும் ப்ளேஸ்டேசன்3 ஆகியவற்றின் விலைகளைக் குறைக்கும் என்று நம்பலாம்.

இந்த புதிய வி யு கேமிங் சாதனத்தில் பல சூப்பாரன வீடியோ விளையாட்டுகள் இருக்கின்றன. குறிப்பாக நியூ சூப்பர் மரியோ ப்ராஸ் யு, நிண்டின்டோ லேண்ட், அசாஸின்ஸ் க்ரீட் 3, பேட்மேன்: அக்ரம் சிட்டி ஆர்மர்டு எடிசன், டிஸ்னி எபிக் மைக்கி 2: த பவர் ஆப் டு, மற்றும் பிபா 13 மற்றும் பல விளையாட்டுகளை இந்த விளையாட்டு சாதனத்தில் விளையாடி அனுபவிக்கலாம்.

இந்த புதிய விளையாட்டு சாதனம் வி யு கேம்பேட் என்று ஒரு புதிய கண்ட்ரோலரைக் கொண்டுள்ளது. இந்த கண்ட்ரோலரில் ஒரு அம்சமான தொடுதிரை மற்றும் இயக்கு பட்டன்கள் ஆகியவை உள்ளன. டிவி இல்லாத போது இந்த தொடுதிரையில் சூப்பராக விளையாடலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X