Home
Computer

கூகுள் நெக்சஸ் 7 டேப்லெட்: முன்னோட்டம்

By Karthikeyan
கூகுள் நெக்சஸ் 7 டேப்லெட்: முன்னோட்டம்

கூகுளின் நெக்சஸ் 7 டேப்லெட் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்ததும் இந்தியா உட்பட உலக அளவி்ல் அந்த புதிய டேப்லெட்டைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அதற்கு முக்கிய காரணம் இந்த டேப்லெட் மலிவு விலையில் வருகிறது. அதோடு இந்த டேப்லெட் மலிவு விலையில் வந்தாலும் நவீன தொழில் நுட்பங்களுடன் வருகிறது. அதாவது இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் இயங்குகிறது.

அதோடு க்வாட் கோட் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதோடு 7 இன்ச் அளவில் ஒரு சூப்பரான ஐபிஎஸ் எல்சிடி திரையைக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த புதிய டேப்லெட் அமேசானின் கிண்டில் பயர் டேப்லெட்டை விட சூப்பராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படிப்பட்ட இந்த அம்சமான டேப்லெட் வரும் அக்டோபரில் களமிறங்க இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்கள் இந்த டேப்லெட்டை வரவேற்கே இப்போதே தயாராகி வருகின்றனர். ஆனாலும் இந்த டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நெக்சஸ் 7 டேப்லெட் 12 கோர் க்ராபிக்ஸ் ப்ராசஸர் மற்றும் என்விடியா டேக்ரா 3 க்வாட்கோர் 1.3 ஜிஎச்ஸட் சிபியு, 1 ஜிபி ரேம், 1.2 எம்பி முகப்பு கேமரா, ப்ளூடூத், வைபை, யுஎஸ்பி மற்றும் என்எப்சி போன்ற வசதிகளுடன் வருகிறது. அதோபோல் இந்த டேப்லெட்டில் ஏராளமான சென்சார்களும் உள்ளன.

இந்த டேப்லெட் 8ஜிபி மற்றும் 16ஜிபி ஆகிய மாடல்களில் வருகின்றன. ஆனால் இதன் சேமிப்பை விரிவு செய்ய முடியாது. 8ஜிபி டேப்லெட் ரூ.11500க்கும், 16ஜிபி டேப்லெட் ரூ.13700க்கும் விற்கப்படும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X