இந்தியாவில் பிரிமஸ் லேப்டாப்புகளை அறிமுகம் செய்யும் நெக்ஸ்ட்கோ.!

பிரிமஸ் லேப்டாப்புகள் அதிகபட்ச வெப்பநிலையை தாங்கும் திறன் கொண்டது.

|

ஹாங்காங்கை சேர்ந்த நெக்ஸ்ட்கோ நிறுவனம் தற்போது புதிய அதிநவீன வசதிகள் கொண்ட லேப்டாப் மாடல்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் பிரிமஸ் லேப்டாப்புகளை அறிமுகம் செய்யும் நெக்ஸ்ட்கோ.!

இந்த புதிய பிரிமஸ் என்.எக்ஸ்101 லேப்டாப் 14 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது. அதேபோல் இன்னொரு மாடலான பிரிமஸ் என்.எக்ஸ் 201 மாடல் லேப்டாப் 15.6 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டது. இந்த இரண்டு மாடல் லேப்டாப்புகளும் மக்னீஷியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் எடை குறைவானதாகவும், அதே நேரத்தில் உறுதியானதாகவும் இருக்கும். 72 ஹார்வேட் சோதனை மற்றும் 12 அமெரிக்க மிலிட்டரி சோதனை ஆகியவைகளால் உட்படுத்தப்பட்ட இந்த லேப்டாப் அதிகபட்ச வெப்பநிலையையும் தாங்கும் திறன் கொண்டது.

இந்த புதிய நெக்ஸ்ட்கோ தயாரிப்பு லேப்டாப்புகள் மும்பை, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய ஷோரூம்களிலும், அமேசான், பிளிப்கார்ட் போன்ற இகாமர்ஸ் சந்தையிலும் கிடைக்கும். இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ள இந்த லேப்டாப்புகளின் விலை ரூ.80,990 மற்றும் ரூ.109,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த லேப்டாப்புகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 12 மணி நேரம் இயங்கும் தன்மை கொண்டது என்றும், மேலும் இதில் பிளாட் டிஸ்ப்ளே அம்சம் உள்ளது என்றும், நான்கு விநாடிகளுக்கு 350 மிலி கசிவை தடுக்கும் வகையில் இதன் கீபோர்டுகுஅள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிறுவனம் உறுதி கொடுத்துள்ளது. மேலும் பிரிமஸ் மாடல்களின் லேப்டாப்புகளில் அதிநவீன எலக்ட்ரானிக் அம்சங்கள் இருப்பதால் பாதுகாப்பு மற்றும் அனைத்து முக்கிய டவுன்லோடுகள் மற்றும் ஹார்ட் டிஸ்க்கில் சேமிக்கப்பட்ட ஆவணங்கள் பாதுகாப்பை பெறுவதாகவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இந்தியாவில் பிரிமஸ் லேப்டாப்புகளை அறிமுகம் செய்யும் நெக்ஸ்ட்கோ.!

பிரிமஸ் லேப்டபபுகள் விண்டோஸ் ஹலோ சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் இதன் பயனர்கள் இந்த லேப்டாப்புகளை பயோமெட்ரிக் சென்சார்கள் மூலம் அல்லது முகம் மற்றும் பிங்கர் பிரிண்ட் மூலம் இரண்டு நொடிகளில் அன்லாக் மற்றும் லாக் செய்ய முடியும் என நெக்ஸ்ட்கோ, நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மாடல் ஒரு முழுமையான எச்டி ஐஆர் கேமரா, டாப் ஃபியரிங் ஸ்பீக்கர்கள் மற்றும் ஸ்மார்ட் ஆம்பிலிஃபியர் ஆகியவை கொண்டுள்ளதால் வீடியோ கான்பரன்சிங் செய்யும்போது ஒரு புதுவித அனுபவம் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Nexstgo launches Primus laptops in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X