Home
Computer

முழுக்க முழுக்க கல்விக்கான ஓர் புதிய டேப்லெட்!

By Karthikeyan
முழுக்க முழுக்க கல்விக்கான ஓர் புதிய டேப்லெட்!

தற்போது வரும் டேப்லெட்டுகள் தகவல் பரிமாற்றம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு மட்டும் அல்லாமல், கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில் கல்விக்கு முக்கியத்தும் தரும் வகையி்ல ஒரு புதிய டேப்லெட் களம் இறங்க இருக்கிறது.

இந்த கல்விக்கான டேப்லெட்டைத் தயாரிக்க நீயூஸ் கார்ப் மற்றும் எடி&டி ஆகிய நிறுவனங்கள் வர்த்தக ஒப்பந்தம் செய்திருக்கின்றன. இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில் வரும் இந்த புதிய டேப்லெட் கண்டிப்பாக கல்விக்கான தேவைகளை செவ்வனே நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டேப்லெட்டிற்கு ஆம்பிளிபை என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

குறிப்பாக சிறு குழந்தைகள் வகுப்பிலிருந்து பெரிய மாணவர்கள் வகுப்புகள் வரை இந்த டேப்லெட்டைப் பயன்படுத்தும் வகையில் இந்த டேப்லெட் இருக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக உருவத்தில் இந்த டேப்லெட் சாம்சங் கேலக்ஸி டேப்பை ஒத்திருக்கிறது.

இந்த புதிய டேப்லெட் அமெரிக்காவில் முதலில் களம் இறங்க இருக்கிறது. அதனால் இந்த டேப்லெட் அமெரிக்க மாணவர்களின் மிகப் பெரிய சொத்தாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. மேலும் அந்த மாணவர்களின் கற்கும் அனுவத்தை ஒரு படி மேலே உயர்த்தும் என்றும் நம்பப்படுகிறது.

மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ப இந்த டேப்லெட்டில் எண்ணிலடங்கா அப்ளிகேசன்கள் உள்ளன. அதுபோல் பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த டேப்லெட்டில் உள்ளதால் படிக்கும் போது மாணவர்களுக்கு இது போர் அடிக்காது. குறிப்பாக என்சைக்லோபேடியா, புத்தகங்கள், வீடியோக்கள் மற்றும் ரிமோட் டியூட்டரிங் அப்ளிகேசன்கள் போன்றவை இந்த டேப்லெட்டில் இருப்பதால் இந்த டேப்லெட்டை ஒரு கல்விக்கான கருவி என்றே அழைக்காம்.

மேலும் இந்த டேப்லெட் கணித பாடங்கள், ஆங்கில இலக்கணம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் சமூக அடிப்படையிலனான பாடங்களும் இதில் உள்ளன. அதுபோல் ஒரு சில விளையாட்டுகளும் இந்த டேப்லெட்டில் உள்ளன.

இந்த டேப்லெட் 4ஜி மற்றும் வைபை போன்ற வசதிகளைக் கொண்டு வருகின்றன. மேலும் மாணவர்கள் மிக எளிதில் பயன்படுத்தும் வகையில் இந்த டேப்லெட் வரும் என்று தெரிகிறது.

இந்த ஆம்பிளிபை டேப்லெட் வரும் 2012 - 2013 கல்வி ஆண்டில் அமெரிக்கப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஆனால் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X