10மிமீ தடிமனுடன் ஓர் புதிய டேப்லெட்!

Posted By: Karthikeyan
 10மிமீ தடிமனுடன் ஓர் புதிய டேப்லெட்!

கடந்த மாதம் லாஸ் வேகாசில் நடந்த நுகர்வோர் கண்காட்சியில் பல சிறந்த டேப்லெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து இப்போது புதிய புதிய பல நல்ல டேப்லெட்டுகள் தினமும் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ஜப்பானைச் சேர்ந்த டபுள்யுஎஸ்எல் நிறுவனம் வழங்கும் எக்ஸ்விஷன் ஆன்4 என்ற புதிய டேப்லெட் ஆகும்.

இந்த எக்ஸ்விஷன் டேப்லெட்டின் ஹார்ட்வேர் மற்றும் இதர அம்சங்கள் அனைத்தும் பக்காவாக இருக்கின்றன. குறிப்பாக இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. இதன் டிஸ்ப்ளேயின் அளவு 9.7 இன்ச் ஆகும். இந்த டிஸ்ப்ளே 1024 x 768 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது.

இந்த எக்ஸ்விஷன் டேப்லெட்டின் ப்ராசஸர் அம்லாஜிக் 8726-எம்3 ஆகும். இதன் கடிகார வேகம் 1 ஜிஹெர்ட்ஸ் ஆகும். இந்த டேப்லெட் 16ஜிபி இன்ட்ரனல் மெமரியைக் கொண்டிருக்கிறது.

இதன் ரேம் 1ஜிபி டிடிஆர்3 ஆகும். கேமராவிற்காக இந்த டேப்லெட் 0.3 மெகா பிக்சல் கொண்ட வீடியோ காலிங் கேமராவை முகப்பில் கொண்டிருக்கிறது. அதுபோல் வைபை, ஜிபிஎஸ் மற்றும் 3ஜி சப்போர்ட் போன்ற இணைப்பு வசதிகளையும் இந்த டேப்லெட்டில் பார்க்க முடியும். இதன் தடிமன் 10மிமீ மட்டுமே.

இந்த எக்ஸ்விஷன் டேப்லெட்டன் டிஸைன் மிக எளிமையாக இருக்கிறது. இது மெல்லியதாக இருப்பதால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். மேலும் இது ஒரு உறுதியான டேப்லெட்டும் கூட.

இந்த டேப்லெட்டின் டிஸ்ப்ளேயில் மிக சூப்பராக வீடியோவைப் பார்க்க முடியும். அதுபோல் இதன் ப்ராசஸரும் மிக வேகமாக இருக்கும். அதனால் இதை மிக வேகமாக இயக்கவும் முடியும்.

இந்த எக்ஸ்விஷன் டேப்லெட் வரும் ஏப்ரலில் ஜப்பானில் சந்தைக்கு வரும் என்று தெரிகிறது. ஆனால் இதன் விலை பற்றிய அறிவிப்பு இன்னும் வரவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்