Home
Computer

புதிய விஸியோ கணினிகள் மற்றும் லேப்டாப்புகள்!

By Karthikeyan
புதிய விஸியோ கணினிகள் மற்றும் லேப்டாப்புகள்!

விசியோ நிறுவனம் தனது புதிய லேப்டாப் மற்றும் அல்ட்ராபுக்குகளை சமீபத்தில் களமிறக்கி இருக்கிறது, இந்த புதிய லேப்டாப் மற்றும் நெட்புக் ஆகியவை மேக்புக்குகளைப் போலவே மெல்லியாதாக இருக்கின்றன.

அதுபோல் விசியோவின் ஆல் இன் ஒன் கணினிகள் 3ஜி இன்டர்ல கோர் டூவல் மற்றும் க்வாட் கோர் ஐ3, ஐ5 மற்றும் ஐ5 ப்ராசஸர்களைக் கொண்டுள்ளன. இவற்றில் உள்ள துணை ஊபர்கள் சூப்பரான இசை வெள்ளத்தை வழங்கும். இந்த கணினிகள் 24, 27 ஆகிய இன்ச் அளவுகளில் 1080பி எச்டி டிஸ்ப்ளேயுடன் வருகின்றன.

அதுபோல் இவற்றில் 3 யுஎஸ்பி போர்ட்டுகள் இசாட்டா போர்ட்டுகள், எச்டிஎம்ஐ போர்ட்டுகள், எர்த்நெட் போர்ட்டுகள் ஆகியவை உள்ளன. அதுபோல் பொழுதுபோக்கிற்காக இந்த கணினியில் ஏராளமான அம்சங்களும் உள்ளன.

விசியோவின் நோட்புக்குகள் அலமினிய தகடுகளால் செய்யப்பட்டுள்ளன. பார்ப்பதற்கும் மேக்புக் ஏரைப் போல உள்ளன. இவை 14 அல்லது 15.6 இன்ச் ஆகிய அளவுகளில் வருகின்றன. இதன் திரையின் ரிசலூசன் சூப்பராக இருக்கும். மேலும் இவை யுஎஸ்பி போர்ட்டுகள், எச்டிஎம்ஐ போர்ட், 1.3 எம்பி வெப்காம் மற்றும் 128 ஜிபி சாலிட் ஸ்டேட் ட்ரைவ் ஆகிய வசதிகளுடன் வருகின்றன. மேலும் இவை விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் இயங்கு தளத்தில் இயங்குகின்றன.

விசியோவின் 24 இன்ச் ஆல் இன் ஒன் கணினி 900 அமெரிக்கா டாலர்களுக்கு விற்கப்படுகின்றன. அதுபோல் 27 இன்ச் மேசைக் கணினி 1100 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுகின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X