Home
Computer

Tecno நிறுவனத்தின் முதல் லேப்டாப் அறிமுகம்: தரமான அம்சங்கள்.!

டெக்னோ (Tecno) நிறுவனம் தனது முதல் லேப்டாப் மாடலை பெர்லினில் நடந்து வரும் IFA 2022 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக டெக்னோ மெகாபுக் டி1 எனும் பெயரில் இந்த லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெக்னோ மெகாபுக் டி1

டெக்னோ மெகாபுக் டி1

மேலும் சிறந்த வடிவமைப்புடன் அட்டகாசமான அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த டெக்னோ மெகாபுக் டி1 லேப்டாப் மாடல். பயனர்களுக்கு தகுந்த அனைத்து அம்சங்களுடன் இந்த லேப்டாப் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபுல் எச்டி டிஸ்பிளே

ஃபுல் எச்டி டிஸ்பிளே

இப்போது இந்த டெக்னோ மெகாபுக் டி1 லேப்டாப் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 15.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த அட்டகாசமான லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

 350 நிட்ஸ் ப்ரைட்னஸ்

350 நிட்ஸ் ப்ரைட்னஸ்

டெக்னோ மெகாபுக் டி1 லேப்டாப் ஆனது 350 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியை கொண்டுள்ளது. அதேபோல் இந்த புதிய சாதனம் DC அடாப்டிவ் டிம்மிங் அம்சத்தையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த லேப்டாப் சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

பிராசஸர் ?

பிராசஸர் ?

டெக்னோ மெகாபுக் டி1 லேப்டாப் மாடலில் 10-வது ஜென் இன்டெல் கோர் ஐ5-115ஜி7 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இதை இன்டெல் கோர் ஐ7 பிராசஸர்-க்கு மேம்படுத்த ஒரு விருப்பமும் உள்ளது.

1டிபி ஸ்டோரேஜ்

1டிபி ஸ்டோரேஜ்

புதிய டெக்னோ மெகாபுக் டி1 லேப்டாப் ஆனது 8ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம்+ 1டிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 1.4 கிலோ எடை கொண்டது இந்த டெக்னோ லேப்டாப் மாடல்.

 டூயல் மைக்குகள்

டூயல் மைக்குகள்

DTS ஆடியோ ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல். குறிப்பாக இந்த புதிய லேப்டாப் சிறந்த ஆடியோ தரத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் AI மற்றும் ENC-இயக்கப்பட்ட டூயல் மைக்குகள் உள்ளன.

2எம்பி வெப்கேம்

2எம்பி வெப்கேம்

டெக்னோ மெகாபுக் டி1 லேப்டாப் மாடல் ஆனது விண்டோஸ் 11 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. மேலும் 70Wh பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப். பின்பு 65W பாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப்.

குறிப்பாக இந்த டெக்னோ மெகாபுக் டி1 லேப்டாப் மாடலில் கைரேகை ஸ்கேனர் வசதியும் உள்ளது. பின்பு புளூடூத் 5.0, பேக்லிட் கீபோர்டு, 2எம்பி வெப்கேம் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது புதிய டெக்னோ லேப்டாப் மாடல்.

டெக்னோ மெகாபுக் டி1 லேப்டாப் விலை

டெக்னோ மெகாபுக் டி1 லேப்டாப் விலை

டெக்னோ மெகாபுக் டி1 லேப்டாப் மாடலின் விலைப் பற்றிய தகவலை இன்னும் வெளியிடவில்லை அந்நிறுவனம். குறிப்பாக அனைத்து நாடுகளிலும் விரைவில் இந்த லேப்டாப் விற்பனைக்கு விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
New Tecno Megabook T1 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X