கம்ப்யூட்டர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய வகை பாதுகாப்பு குறைபாடு.!

எப் செக்யூர் நிறுவனத்திலிருந்து வந்த ஆலோசகர்கள் நவீன கணினிகளில் இந்த பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்தனர்

|

எப் செக்யூர் இன்ற பாதுகாப்பு நிறுவனம் ஒன்று நவீன கம்ப்யூட்டர்கள் மற்றும் மேக்ஸைப் பாதிக்கும் ஒரு புதிய மென்பொருள் பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடித்துள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாடானது, நவீன கணினிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

கம்ப்யூட்டர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய வகை பாதுகாப்பு குறைபாடு.!

எப் செக்யூர் நிறுவனத்திலிருந்து வந்த ஆலோசகர்கள் நவீன கணினிகளில் இந்த பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்தனர், இது ஹேக்கர்கள் வேலையாகத்தான் இருக்கும் என்றும், பிற முக்கிய தரவுகளை திருட அனுமதிக்கும். இதுபோன்ற குறைபாடுகளை கவனத்தில் கொள்ளாமல் இருந்தால் தகவல்கள் திருடப்படுவதை தவிர்க்க முடியாது என்றும் கம்ப்யூட்டர் விற்பனையாளர்கள் மற்றும் பயனர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


இதுகுறித்து எப் செக்யூர் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிவின் அதிகாரி ஓலி செடர்டட் என்பவர் கூறியபோது, 'கம்ப்யூட்டரில் உள்ள பல்வீனத்தை அடிப்படையாக கொண்டு ஹேக்கர்கள் கம்ப்யூட்டர் மீது தாக்குதலை நடத்துவார்கள் ஒருமுறை அவர்கள் கம்ப்யூட்டரை அட்டாக் செய்து நுழைய அவர்களுக்கு ஐந்து நிமிடங்கள் போதும். இந்த பாதுகாப்பு பலவீனத்தை கட்டுப்படுத்த இன்னும் நிறுவனங்கள் தயாராகவில்லை. சமீபத்தில் தான் அதிகளவிலான அதி நவீன கம்ப்யூட்டர்களில் இந்த வகை தாக்குதல் நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பெரும்பாலான கம்ப்யூட்டர் நிறுவனங்களும் பயன்பாட்டாளர்களும் போதுமான பாதுகாப்பு வசதிகளுடன் கம்ப்யூட்டரை பாதுகாக்காததே காரணம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். ஆனால் நாங்கள் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அதற்கான தீர்வையும் நெருங்கி வருகிறோம்


இந்த பாதுகாப்பு குறைபாடுடன் கூடிய ஒரு கம்ப்யூட்டரை அணுகுபவர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து அறியப்பட்ட ஒரு கோல்ட் பூட் தாக்குதலைத் தோற்றுவிக்கிறது. இந்த தாக்குதல்கள், ஒரு கம்ப்யூட்டர் முறையான ஷட்டவுன் செய்தவுடன் மீண்டும் ரீஸ்டார்ட் ஆவதுடன் ராமில் உள்ள தகவல்கள் காணாமல் போகிறது. நவீன லேப்டாப்புகளிலும் இதுபோன்ற தாக்குதல்களை காண முடிகிறது. எனினும் இந்த குறைபாடுகளை போக்க எங்கள் டீம் ஒரு வழியை கண்டுபிடித்துள்ளது

இந்த கோல்ட் போட் தாக்குதலை ஒப்பிடும்போது கம்ப்யூட்டர்களின் செயல்முறை கூடுதல் நடவடிக்கைகளை எடுத்தாலும், நவீன லேப்டாப்புகளில் இருந்து தரவைத் திருடுவது வழக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வகை மிரட்டல் லேப்டாப்புகளில் திருடப்பட்ட அல்லது சட்டவிரோதமாக பெறப்பட்ட சூழல்களில் பொருந்துகின்றன. யூஎஸ்பி போர்ட் மூலம் சிறப்புத் திட்டத்தை துவக்குவதன் மூலம் கோல்ட் போட் தாக்குதல்கள் செய்யப்படலாம்.


இவ்வகை தாக்குதல் நடந்திருக்கின்றது என்பதை அறியாமலேயே பல நிறுவனங்கள் தங்களுடைய லேப்டாப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். பின்னர் ஒருநாள் திடீரென தங்களுடைய டேட்டாக்கள் காணாமல் போனதை உணர்கின்றனர். 99% கார்ப்பரேட் நிறுவனங்கள் டேட்டாக்கள் திருடப்பட்டவுடன் ஹேக்கர்களின் மிரட்டலுக்கு பயந்து அவர்களுக்கு பணிந்துவிடுகின்றனர். இந்த பிரச்சனைகளில் இருந்து நிறுவனங்கள் வெளிவருவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை

கம்ப்யூட்டர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய வகை பாதுகாப்பு குறைபாடு.!

இந்த தாக்குதல்களை எதிர்கொள்ள ஒரு உடனடி நடவடிக்கையை தயார் செய்து அதனை பரிந்துரைக்கிறோம். இதன்படி ஒரு கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்புகளை ஷட் டவுன் செய்வதற்கு பதில் அதனை ஸ்லீப் மோடுக்கு மட்டும் கொண்டு செல்லவும். அதே நேரத்தில் பணியாளர்களுக்கு கோல்ட் போட் அட்டாக் குறித்த விழிப்புணர்வுகளையும் அறிய செய்ய வேண்டும். அதேபோல் அந்த தாக்குதல்களில் இருந்து எப்படி வெளியே வரவேண்டும் என்பதையும் சொல்லி கொடுக்க வேண்டும். மேலும் தகவல்கள் திருடப்பட்டால் அதனை மீட்டெடுக்கும் வழிகளையும் ஐடி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டும்
Best Mobiles in India

English summary
New security flaw discovered targets modern PCs and Macs: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X