Home
Computer

இந்திய மார்க்கெட்டுக்காக சாம்சங் வழங்கும் புதிய லேப்டாப்

By Karthikeyan
இந்திய மார்க்கெட்டுக்காக சாம்சங் வழங்கும் புதிய லேப்டாப்

இந்திய வாடிக்கையாளர்களுக்காகவே சாம்சங் நிறுவனம் பிரத்யேகமாக சாம்சங் என்பி300வி5எ சோபின் என்ற புதிய லேப்டாப்பைக் களமிறக்குகிறது. அந்த லேப்டாப் தரத்தில் உயர்வாகவும் விலையில் குறைவாகவும் வருகிறது.

சாம்சங் என்பி300வி5எ சோபின் ஒரு அடக்கமான லேப்டாப் எனலாம். ஏனெனில் அது சிறிய லேப்டாப் ஆகும். மேலும் அது பார்ப்பதற்கும் படு ஸ்டைலாக இருக்கிறது. இதன் எடை 2.45 கிலோவாகும்.

இந்த லேப்டாப் கீபோர்டு மிக அழகாக டிஸைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் டைப் செய்வது மிக எளிதாக இருக்கும். அதன் டச்பேடும் மிகத் தரமாக உள்ளது. ஸ்க்ரோல் செய்வதற்கான பகுதி டச்பேடின் வலது ஓரத்தில் உள்ளது.

சாம்சங் என்பி300வி5எ சோபின் 15.6 இன்ச் கொண்ட உயர் டெபினிசனுடன் கூடிய எல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேயின் பிக்சல் ரிசலூசன் 1366X768 ஆகும். அதுபோல் இதன் திரை ஆன்டி ரிப்லக்டிவ் கோட்டிங் கொண்டுள்ளது.

இதன் திரையின் முன்பு மின் விளக்கு எரிந்தாலும் அது திரையில் எதிரொலிக்காது. மேலும் பொது இடங்களில் இருக்கும்போது இதில் வேலை செய்ய நாம் நிழலைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. வெளிச்சம் அதிகமிருந்தாலும் இதன் திரை மிகத் தெளிவாகத் தெரியும். மேலும் இந்த லேப்டாப்பை எடுத்துச் செல்வதற்கு மிகவும் எளிதானது.

சாம்சங் என்பி300வி5எ சோபினின் டிவைஸ் 2.30 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட இன்டெல் கோர் ஐ5 ப்ராசஸரைக் கொண்டள்ளது. இதன் மொத்த மெமரி 6ஜிபி டிடிஆர்3 ஆகும். மேலும் இது 750ஜிபி எஸ்-எடிஎII ஹார்ட் ட்ரைவ் கொண்டுள்ளது. இது நிமிடத்திற்கு 5400 முறை சுழலும் திறன் படைத்தது.

சாம்சங் என்பி300வி5எ சோபினில் சேமிப்பு வசதி அதிகம். இதில் உயர்தரம் கொண்ட ரேம் உள்ளதால் இதன் ஹார்ட் டிஸ்க் நிறைந்துவிட்டாலும் இந்த லேப்டாப் நின்று விடுவதில்லை. மேலும் இந்த லேப்டாப் என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி 520 எம்எக்ஸ் க்ராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. இது 1ஜிபி க்ராபிக் மெமரி கார்டும் கொண்டு வருகிறது.

சாம்சங் என்பி300வி5எ சோபினின் டிஸ்ப்ளேயின் மேல் 1.3 மெகா பிக்சல் கேமரா உள்ளது. இதன் வெப்காமும் மிகத் தரமாக உள்ளது. அதுபோல் 3 வாட்ஸ் கொண்ட சிறந்த ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. இதில் உள்ள இன்டக்ரேட்டட் மைக்ரோபோன் மைக் இரைச்சலை நீக்கும் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளதால் இதில் வீடியோ கான்பரன்சிங் செய்வதற்கு மிக அருமையாக இருக்கும்.

சாம்சங் என்பி300வி5எ சோபின் 3 யுஎஸ்பி 2.0 போர்ட்டுகள் மற்றும் எஸ்டி, எஸ்டிஎச்சி போன்றவற்றை ரீட் செய்யக் கூடிய கார்டு ரீடரையும் கொண்டுள்ளது. அதுபோல் மற்ற மைக்ரோபோன்களோடு இணைப்பதற்கு தேவையான விஜிஎ மற்றும் எச்டிஎம்ஐ போர்ட்டுகளையும் இந்த லேப்டாப் கொண்டுள்ளது.

சாம்சங் என்பி300வி5எ சோபின் லேப்டாப்பை நேரடியாக எசி பவரிலிருந்து அடாப்டர் மற்றும் டிசி பவர் போர்ட் மூலமாக ஜார்ஜ் செய்ய முடியும். மேலும் இது 48டபுள்யுஎச் கொண்ட 6 செல் பேட்டரியைக் கொண்டுள்ளது. அதனால 7 மணி நேரம் தொடர்ந்து இந்த லேப்டாப்பை இயக்கினாலும் இதன் பேட்டரி தாங்கும் சக்தியைக் கொண்டுள்ளது.

சாம்சங் என்பி300வி5எ சோபின் விண்டோஸ் 7 ஹோம் ப்ரிமியம் 64 பிட் இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதோடு இது பாதுகாப்பிற்காக நோர்ட்டன் இன்டர்நெட் செக்யூரிட்டி மற்றும் கென்சிங்டன் லாக் ஸ்லாட் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

சாம்சங் என்பி300வி5எ சோபினின் விலை ரூ.38,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X